உள்ளூர் செய்திகள்

ஏஞ்சலினாஜோலியின் புதிய அவதாரம்!

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு, நடிப்பு போரடித்து விட்டது போலிருக்கிறது; படங்களை இயக்கும் முடிவுக்கு வந்துள்ளார். ஏற்கனவே, தி லேண்ட் ஆப் பிளட் அண்ட் ஹனி என்ற படத்தை இயக்கியுள்ளார். போஸ்னியா போரின் பின்னணியில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து, அந்த படத்தை இயக்கியிருந்தார். இப்போது, மீண்டும் அதே போர் பின்னணியை மையமாக வைத்து, ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். இரண்டாம் உலகப் போரின் போது நடந்த உண்மை சம்பவம் தான், படத்தின் மைய கரு; படத்துக்கு, அன்பிரக்கபிள் என, பெயர் கூட தயாராகி விட்டது.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !