உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்

*டி.ரங்கராஜன், திருப்பூர் : மக்கள் பணத்தை ஏப்பம் விட்டு, தலைமறைவான - கைதாகி, ஜாமீனில் வந்த பைனான்ஸ் அதிபர்களின் தற்போதைய நிலை என்ன?பென்ஸ், 'எஸ்' சீரிஸ் காரில் வலம் வருகின்றனர். மார்க்கெட்டில் நம்பர் ஒன் ஆகத் திகழும் தமிழ், இந்தி, தெலுங்கு நடிகைகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு உல்லாசப் பயணம் மேற்கொள்கின்றனர். மொத்தத்தில் மகாராசாக்கள் போல வாழ்கின்றனர்!*****சி.சேதுராமன், நெய்வேலி : மூளையை கசக்கிப் பிழிந்து, லஞ்சத்தை ஒழிக்க ஒரு வழி சொல்லுங்களேன்...கசக்கவும் வேண்டாம், பிழியவும் வேண்டாம். லஞ்சத்தைப் பொறுத்து, வாங்கியவரின் பதவி முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, அரபு நாடுகளைப் போல கை வெட்டுதல் முதல், தலை சீவுதல் வரை செய்தால் போதுமே!****என்.ஜெயலட்சுமி, பனங்குடி : ஏழை, பணக்காரன் இவர்கள், இந்த காலத்தில் எதற்கு வருந்துகின்றனர்?'ஒருவேளை சாப்பாடு கூட இல்லாமல் உருக்குலைகிறோமே' என்று கலங்குகிறான் ஏழை! உடம்பு சதையை குறைக்க வழி தெரியாமல் வருந்துகிறான் பணக்காரன்!***** செ.பாலகிருஷ்ணன், பாளையங்கோட்டை : நம் நாடு முன்னேறாததற்கு காரணம் என்ன?மக்களைப் புரிந்து கொண்டு விட்டனர் அரசியல்வாதிகள். இன்னும் அரசியல்வாதிகளை புரிந்து கொள்ளவில்லை மக்கள்; இதுவே, நாடு பின்தங்கி இருப்பதற்கு காரணம்!****ஜி.தாமரைச்செல்வி, விருதுநகர் : 'பணம்தான் உலகம்' என்கிறாள் என் தோழி...இல்லவே இல்லை! நமக்கு நாமே தான் உலகம். பணத்தை படைத்தது நாம் தான். பணம் தான் நம்மை நம்பி இருக்க வேண்டுமே தவிர, அதை நம்பி நாம் இருக்கக் கூடாது!*****ஆ.ராம்குமார், விளாங்குடி : சக்தி வாய்ந்த டானிக் ஏதாவது உள்ளதா? எங்கே கிடைக்கும்?மிகவும் சக்தி வாய்ந்த டானிக் நம்பிக்கை... அது அவரவர் மனநிலையிலேயே இருக்கிறது! ஒரு நாளும் இந்த டானிக்கை தொலைத்து விடக் கூடாது!****எஸ்.முரளி, ஆவடி : பெண்கள், எளிதில் ஏமாந்து விடுகின்றனரே...வேஷங்களை, கபட நாடகங்களை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியாத இளகிய சுபாவம் கொண்டிருப்பதால், தொடர்ந்து வாழ்வின் ஒவ்வொரு இடத்திலும், படித்திருந்தும் ஏமாற்றப்படுகின்றனர். எப்போது தெளிவார்களோ... தெரியவில்லை!****மா.செந்தூர்பாண்டியன், கொளத்தூர் : வேலை இல்லா பட்டதாரிகளுக்கு, உங்கள் ஆலோசனை என்ன?தம் பெயருக்கு பின்னால் போட்டுக் கொண்டுள்ள பட்டத்தை மறந்து விட வேண்டும்... அப்படி மறந்தால், அவர்களிடமிருக்கும், 'ஈகோ' மறையும். அப்புறம் என்ன... ஆயிரம் வேலை இடங்கள் கண் முன்னே விரியுமே!****என்.ராகுல், சிவகாசி : மனிதனின் அவசியத் தேவைகள் என்ன?உள்ளத்தில் தூய்மை, உடம்பில் உடை, கையில் காசு!***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !