உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

கோ.செந்தில், திருவொற்றியூர், சென்னை: 'மதம் என்பது அபின்' என்கின்றனரே, கம்யூனிஸ்ட்கள்... அது சரி... இவர்கள், தம் மகளையோ, மகனையோ, நாத்திகம் பேசுவோருக்கு மணம் முடித்துக் கொடுத்திருக்கின்றனரா?மதம் மற்றும் ஜாதி தம்முடையது தானா என, அறிந்த பின் தானே மணம் முடித்துள்ளனர்!ஏ.ஆர்.அசாருதீன், கடலுார்: நடிகர் கமல், தம் கட்சி, எல்லா, லோக்சபா தொகுதிகளிலும் தனித்து நின்று ஜெயிக்கும் என்று சொல்கிறாரே...இதை என்னிடம் கேள்வியாக கேட்டிருக்காமல், தமாஷாக மாற்றி, நம் இதழுக்கு அனுப்பி இருந்தீர்கள் என்றால், 1,000 ரூபாய் பரிசு பெற்று இருப்பீர்களே!அ.குணசேகரன், புவனகிரி: அப்பாவி உயிர்களை பலி வாங்கும் பயங்கரவாதிகளுக்காக, சில கட்சிகள் போராடுகின்றனவே...அந்த ஏழு பேரையும், இவ்வளவு நாள், 'கம்பி' எண்ண விட்டிருக்காமல், அன்றே கழுத்தில் கயிறு கட்டி இருக்க வேண்டும்! இதேபோல தான் மற்ற மாநிலங்களிலும்.தமிழகத்தில், '0' கட்சிகள் எல்லாம், ஓட்டு கிடைக்கும் என்ற நோக்கில், 'லுாசு' பாட்டு பாடி வருகின்றன!* என்.ரவிச்சந்திரன், சிவகங்கை: மது இல்லாத தமிழகம் மலருமா?இனி, ஒரு நாளும் மலரப் போவது இல்லை! அரசே நிறுத்தினாலும், 'காய்ச்சுபவர்கள்' தம் வேலையை சுறுசுறுப்பாக்கி விடுவரே... அதன் பிறகு, காக்கி மற்றும் வெள்ளை உடை அணிவோரின், 'பர்ஸ்' மிக பருமனாகி விடும்!* லெ.நா.சிவக்குமார், சென்னை: அரசியல்வாதிகள், பொதுக்கூட்டங்களில் பேசும்போது, 'அவர்களே... இவர்களே...' என்று பேசி, நம் நேரத்தை வீணடிக்கின்றனரே...அவர்கள் மீது குறை சொல்லும் நீங்கள் தான் தவறு செய்கிறீர்கள்... காசு சம்பாதிக்க, இப்படி பேசுகின்றனர்! திரும்ப கிடைக்காத நேரத்தை வீணடித்து, பொதுக் கூட்டங்களுக்கும், 'டிவி'யிலும் இவற்றை பார்க்காதீர்!என்.செல்வி, காஞ்சிபுரம்: நினைத்தவுடன் சிரிப்பு வரும், தமிழகத்தின் சம்பவங்கள் ஏதும் உண்டா?ஏன் இல்லாமல்... ரஜினி, கமல் இருக்கின்றனரே!சா.சொக்கலிங்க ஆதித்தன், ரோஸ்மியாபுரம், நெல்லை: தி.மு.க., தலைவர், ஸ்டாலினுக்கு, இந்திய பிரதமர் பதவி மீது ஆசை உள்ளதா?ஏன்... அவரது குடும்பத்தினருக்கே ஆசை உள்ளது... அதுவும், அமெரிக்க அதிபராகவும், ஆசை உள்ளது ஸ்டாலினுக்கு... ஆனால், இங்கேயே, முதல்வர் ஆக முடியாத நிலையில் உள்ளாரே அவர்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !