அந்துமணி பதில்கள்!
* வெ. சென்னப்பன், கீரைப்பட்டி, தர்மபுரி: எப்போதாவது, மாட்டு வண்டியில் பயணம் செய்தது உண்டா?ஏன்... ரெட்டை மாட்டு வண்டியையே ஓட்டி இருக்கிறேன். எந்தக் காலால் அதன் காலை நாசுக்காக சுரண்டினால், எப்படி திரும்ப வேண்டியது என்று தெரியும். வேறு பாக சுரண்டல், அதன் வேகத்தை கூட்டவும், குறைக்கவும் உதவும்! இதெல்லாம் தாத்தா, (அம்மாவுடைய அப்பா) கற்றுக் கொடுத்தது!ஆர். காவ்யா, செ.புதுார், தஞ்சாவூர்: உங்களின் தலை தீபாவளி அனுபவம் எப்படி இருந்தது?நாங்கள் குடியிருக்கும் அறையிலேயே, தினசரி இரவு, 5- 6 லுங்கி பார்ட்டிகள் அவ்வப்போது, அணுகுண்டுகள் வீசும். மேலே தங்கியிருக்கும் சேட்டு, அவர் வீட்டு தீபாவளிக்கு, ஒரே நேரத்தில், 10 ஆயிரம் வாலா பட்டாசை வைத்து விட்டார்... கேட்பானேன்! * எஸ். வடிவேல், பெங்களூரூ: மந்திர சக்தி என்று இருப்பதாக கூறுகின்றனரே... அது உண்மையா?மந்திர சக்தி என்றதும், ஒரு சினிமா காட்சி நினைவில் வருகிறது. அதில், நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு, மதுரை ஓட்டலில் அனைவரும் திரண்டு, தங்கி இருப்பர்! மந்திரவாதி, தன் வாயிலிருந்து, கோலி குண்டு, சிவன் சிலை மற்றும் குட்டி குட்டி சமாசாரங்களை எடுத்துக் கொடுப்பார்.உடனே, நடிகர் விவேக், 'எங்கே ஒரு பூசணிக்காய் எடுத்துத் தாருங்கள்...' எனக் கேட்பார்.அடுத்த வினாடி, அந்த பூசாரி காணாமல் போய் விடுவார்!இப்படி ஒரு சக்தி இருக்குமானால், அணுகுண்டு தயாரிக்க, இந்தியா இவ்வளவு செலவிட வேண்டியது இல்லையே! எஸ். முத்து, மதுரை: இரண்டாவது முறையாக, தயாநிதி மாறன், தி.மு.க., - எம்.பி., ஆகியிருக்கிறாரே... அவர் எப்படி?நான் பழகிய வரையில், தனிப்பட்ட முறையில், மிக தங்கமானவர்! அரசியலை பொறுத்தவரை, அவரது, 'திறமை'யை பழைய ஆட்சியிலேயே கண்டு கொண்டு விட்டோமே!* கே.ஆர். பத்மா, சென்னை: பெண்களுக்கு, இலவச பேருந்து மற்றும் மெட்ரோ ரயில் பயண சலுகையை, டில்லி அரசு அளித்துள்ளதே... இதை எத்தனை மாதங்கள் செயல்படுத்த முடியும்?இதனால், டில்லி முதல்வர் பதவி, தனக்கு, பேருந்து மற்றும் 'மெட்ரோ ஓசி' இருக்கைகள் மூலமாக மீண்டும் கிடைக்கும் என, ஒரு, 'ஐடியா' போட்டு இருக்கிறார். ஒருவேளை, அதே பதவி கிடைத்து விட்டால், நிலைமை தலைகீழாக மாறும் என்பதில் சந்தேகமே இல்லை!ஏ. அப்துல் ரஹ்மான், பொன்னமராவதி: பிரான்ஸ் நாட்டின், பாரீஸ் நகரம், உலகின் சொர்க்கம் என்கின்றனரே...அதெல்லாம், 'டுபாக்கூர்!' ஒரு சில இடங்கள் எல்லாம், சென்னையிலுள்ள, பாரீஸ் கார்னர் மாதிரி தான்! இதே போல தான், ஸ்வீடன் நாடு மற்றும் கிழக்கு ஜெர்மனியும்!