உள்ளூர் செய்திகள்

அந்துமணி பதில்கள்!

* ரா. இளங்கோ, மதுராந்தகம்: 'என்.எல்.சி., நிறுவனம் வெளியேற வேண்டும்...' என்கிறாரே, பா.ம.க., தலைவர் அன்புமணி.பா.ம.க., மின்சாரம் தயாரித்து தமிழகத்துக்கு கொடுக்குமா? என்.எல்.சி., இல்லாவிட்டால், இவரது வீட்டிற்கே, 'கரன்ட்' கிடைக்காதே!ஆர். சுப்பு, மதுரை: சுற்றத்தார் எப்படி இருக்க வேண்டும்?ஒருவனுக்கு, அன்பு மற்றும் குறைவில்லாத சுற்றத்தார் அமைந்து விட்டால், அவன் வளர்ச்சியையும், குறைவில்லாத செல்வத்தையும் பெறுவான்!* என். ஜெயம், மேல் புவனகிரி: 'ஒருமையில் பேச வேண்டாம்...' என்று, தி.மு.க.,வினருக்கு, முதல்வர் ஸ்டாலின், வாய்ப்பூட்டு போட்டுள்ளாரே...நல்ல முடிவு தான். அத்துடன், அரசியலுக்கு வர முயலும் நடிகர்கள் பற்றி பேசாமல் இருக்கவும் உத்தரவிட்டால், இன்னும் பாராட்டலாம்!ம. வசந்தி, திண்டிவனம்: 'பா.ஜ., - காங்கிரஸ் கூட்டணியில் இடம் கிடைக்கவில்லை என்றால், தைரியமாக தனித்தே போட்டியிடுவோம்...' என்கிறாரே, அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன்...தனித்து தான் போட்டியிட வேண்டியிருக்கும். அப்போது, 'டெபாசிட்' கூட கிடைக்காது என்பது தெரிந்தும் அவர் இப்படி பேசுவது, கவுண்டமணியின், 'ஜோக்'கிற்கு சமமாக இருக்கிறது என்பதில், கொஞ்சம் கூட, 'டவுட்'டே இல்லை!க. லதா, பெங்களூரு: அரசியலில், 'சூப்பர் ஸ்டார்' ஆக, விஜய்க்கு வாய்ப்புள்ளதா?வாய்ப்புள்ளதாகவே கருதுகிறேன். அவரைக் கண்டு, தி.மு.க.,வே அஞ்சுகிறதே. தன் உடல் நலமின்மையை காரணம் காட்டி, ரஜினி அரசியலிலிருந்து விலகாமல் இருந்திருந்தால், அவரே, அங்கும், 'சூப்பர் ஸ்டார்' ஆகி இருக்க முடியும்!எம். சக்திவேல், வேலுார்: ஒரு மனிதனுக்கு தேவையான சக்தி எது?உண்மைக்கு மட்டுமே மகத்தான சக்தி உண்டு. உண்மையை எவராலும் மாற்றிடவோ, மறைத்திடவோ முடியாது. உண்மையை அழித்திடும் சக்தி, எவருக்கும் இல்லை. இந்த உலகில் எப்போதும் நிலைத்திருக்கும் சக்தி, உண்மைக்குத் தான் உண்டு!மு. நாகூர், சாத்தக்கோன்வலசை, ராமநாதபுரம்: 'நாடாளுமன்றத்தில், தி.மு.க., எம்.பி.,க்களின் குரலை கேட்டாலே, பா.ஜ., அரசு நடுங்குகிறது...' என்று, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளாரே...தமிழ் சினிமாவில், தமாஷ் நடிகர்களின் பங்களிப்பு குறைந்து விட்டது. அரசியல்வாதிகள் அந்த இடத்தைப் பிடித்து விட்டனர் என்பதையே முதல்வரின் பேச்சு காட்டுகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !