பிட்ஸ்(ஸா)
நண்பன் நாராயணனுடன், 'வாக்' போகும்போது, சற்று வேதாந்தமாய் பேசினான். 'வாழ்க்கையில் ஏதாவது விழுந்து கொண்டே இருப்பது, இயற்கையின் தத்துவங்களில் முக்கியமானது. மனிதனை எடுத்துக் கொள்... அவனுக்குத் தொப்பை விழுகிறது; பல் விழுகிறது; கால், கை விழுகிறது, வழுக்கை விழுகிறது. குழி விழுகிறது. கூன் விழுகிறது. நரை விழுகிறது. பல்ஸ் விழுகிறது...' என்று, தொடர்ந்து கொண்டே போனான். 'என்னமும் விழுந்துட்டு போகட்டும்; முதலில் மணிபர்ஸ் விழாமலிருந்தால் போதும். சரியாக வை...' என்றேன்.— பாக்கியம் ராமசாமி