உள்ளூர் செய்திகள்

எருமைகளே இவர்கள் தெய்வம்!

நீலகிரியில் வாழும் பழங்குடி மக்களான தோடர்கள் வாழ்க்கை வித்தியாசமானது. அவர்கள், எருமைகளை குலதெய்வமாக கருதுகின்றனர்.இவர்கள் நம்பிக்கைபடி, 'தெகவசி' என்ற தேவதை, முதன் முதலில், 1,600 எருமைகளை உருவாக்கியதாம். இவைகளில் கடைசி எருமையின் வாலை பிடித்து தான், மனிதன் பூமிக்கு வந்ததாக நம்புகின்றனர். மேலும், ஆதி மனிதனின் விலா எலும்பை வைத்து தான் பெண்ணை உருவாக்கியதாக நம்புகின்றனர்.எனவே தான், தோடர் இன மக்கள், எருமைகளை அன்பாகவும், தெய்வமாகவும் பார்க்கின்றனர். இவர்கள் முன், யாராவது எருமைகளை துன்புறுத்தினால், அவர்களை, ஒரு கை பார்த்து விடுவர்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !