கேமரா காதலர்!
கர்நாடக மாநிலம், பெல்காமைச் சேர்ந்தவர், ரவி ஹொங்கேல், 49. இளம் வயதிலிருந்தே புகைப்படக் கலை மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த இவர், அதையே, தன் தொழிலாகவும் மாற்றினார். பெல்காமில் ஸ்டூடியோ வைத்து, திருமண நிகழ்ச்சிகள், கோவில் திருவிழாக்களுக்கு புகைப்படங்கள் எடுத்துக் கொடுத்து வருகிறார். கேமரா மீது உள்ள தீவிர காதலால், தன் மூன்று மகன்களுக்கும், 'கேனன், நிகான், எப்சன்' என, கேமராக்களின் பெயர்களை சூட்டியுள்ளார். அப்படியும், அவரது கேமரா ஆர்வம் அடங்கவில்லை. தன், மூன்று மாடி வீட்டையும், கேமரா போலவே வடிவமைத்து கட்டி, அசத்தியுள்ளார். இந்த வீட்டின் ஜன்னல்கள், கேமரா லென்ஸ் போல் அமைக்கப்பட்டுள்ளன. துாரத்திலிருந்து பார்க்கும்போது பிரமாண்ட கேமரா வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது போல், அந்த வீடு காட்சி அளிக்கிறது.— ஜோல்னாபையன்