தூங்கினாலும் கண்களை மூட முடியாது!
நம் அண்டை நாடான, சீனாவில் வசிக்கும், லீ என்ற பெண், தன்னை அழகுபடுத்த நினைத்து, இப்போது அவஸ்தைப்பட்டு வருகிறார். சீனாவில் உள்ள பெண்களுக்கு, கண் இமைகள் அவ்வளவு எடுப்பாக இருக்காது. இதனால், இளம் பெண்கள் பலர், இமைகளில், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்து, அதை எடுப்பாக மாற்றுவதை வழக்கமாக வைத்துள்ளனர். லீயும் அப்படி ஆசைப்பட்டு, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்துள்ளார். ஆனால், அப்படியும் அவருக்கு திருப்தி வரவில்லை. மீண்டும் ஒருமுறை, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்ய முயற்சித்துள்ளார். அவருக்கு சிகிச்சை அளித்தவர்கள், 'மீண்டும், 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்தால், ஏதாவது பிரச்னை ஏற்படும்...' என, எச்சரித்தும் அவர் கேட்கவில்லை. இரண்டாவது முறையாக, 'பிளாஸ்டிக் சர்ஜரி' செய்ததால், பக்க விளைவு ஏற்பட்டு, லீயால், இப்போது கண்களை மூட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துாக்கத்தில் கூட, இவரது கண்கள் மூடாமல் திறந்தே இருக்குமாம். இதை சரி செய்வதற்காக, ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்கி வருகிறார், லீ. ஜோல்னாபையன்