உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

அறியாமை இருள் விரட்டுங்கள்!கரும்பலகைகளில் வெளிச்சம் விதைத்துஅறியாமை இருள் விரட்டிசூரியப் பிரதிகளை உருவாக்கும்'ஆ' சீரியர்களே...அறிவு மாளிகைக்குஅஸ்திவாரம் அமைத்துதிறம்படக் கட்டிதிறப்பு விழா நடத்திவிளக்கேற்றி வைக்கும்வெள்ளை மனக் கோட்டங்களே...நீங்கள்முள்காட்டை செப்பனிட்டுமுல்லை மலர் வளர்க்கிறீர்கள்சிப்பிகளில் மட்டுமல்லநத்தைகளிலும் முத்து விளைவிக்கிறீர்கள்கூழாங்கற்களை வைரங்களாய்வடித்தெடுக்கிறீர்கள்!நீங்கள்வியர்வை வெப்பத்தில் புழுங்கிவேதனை துளிகளை விழுங்கிசாக்பீசில் முகங் கழுவிசரித்திரம் படைக்கிறீர்கள்!நீங்கள்நெற்றிக்கண் திறந்துநெருப்பை உமிழ நேரினும்கொதித்து வரும் தீயினிலும்குளிர்ச்சி உறைந்திருக்கும்புயலாய் சீறுகிற போதிலும்புன்னகை மறைந்திருக்கும்!நீங்கள் திட்டுவதால்நாங்கள் தீட்டப்படுகிறோம்உளிபடாமல், துளிச்சிதறல் இல்லாமல்எதிர்கால இந்தியாவைசிரத்தையாய் செதுக்கும் சிற்பிகளே...உங்களைசிரம் தாழ்த்தி வாழ்த்திவணங்கி மகிழ்வதில்பெருமிதம் கொள்கிறோம்!— சுப்புராஜ், திருமுல்லைவாயில்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !