வீட்டு பாத்திரங்களில் வாசல் கேட்!
வித்தியாசமான செயல்களை செய்து, மற்றவர்களை வியக்க வைப்பர், சிலர். அந்த வகையில், கேரள மாநிலம், கோட்டயம், குரைநல்லுாரை சேர்ந்த ஓவியர், மோகன்தாஸ் வீட்டின் வாசல் கேட்டை, ஒரு நிமிடம் உற்றுப் பார்த்து விட்டு செல்கின்றனர், அவ்வழியாக செல்வோர். அதில் அப்படி என்ன இருக்கிறது தெரியுமா?வீட்டில் பயன்படுத்தும் குடம், கிண்ணம், தட்டு, டம்ளர், புட்டு குழாய், இட்லி தட்டு, ஸ்பூன், கரண்டி போன்ற, 15 வித பாத்திரங்களை, 'வெல்டு' செய்து, கேட்டை உருவாக்கியுள்ளார். இந்த கேட்டை வடிவமைக்க, 64 ஆயிரம் ரூபாய் செலவானதாக கூறுகிறார், மோகன்தாஸ்.— ஜோல்னாபையன்