உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சூழலுக்கு உகந்த, குளிர்பானம்!

பெரும்பாலான குளிர்பானங்களில், அதிகம் சர்க்கரை சேர்க்கப்படுவதால், அது உடல்நலத்திற்கு கேடு என, எச்சரிக்கப்படுகிறது. இருப்பினும், அதன் சுவைக்கு அடிமையானவர்களால், அவற்றை விட முடியவில்லை.இந்நிலையில், சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான நிறுவனம், உலகிலேயே முதன்முறையாக, சுற்றுச்சூழலுக்கு உகந்த பானத்தை, பேரீச்சம்பழத்திலிருந்து தயார் செய்துள்ளது. இதற்கு, 'மிலாப் கோலா' என, பெயர் சூட்டியுள்ளது.பேரீச்சம்பழத்திலுள்ள நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாஷியம், மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துகளுடன், செயற்கை இனிப்பூட்டிகள் இல்லாமல் ஆரோக்கிய பானமாகவும் திகழ்கிறது.சர்வதேச அளவில் தரக் கட்டுப்பாட்டு சோதனைகள் அனைத்தையும், 'மிலாப் கோலா' கடந்து, தற்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. இந்த பானத்தின் அறிமுக விழாவில் பங்கேற்ற பலரும், இதை அருந்திவிட்டு, அற்புதமான சுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.தீவிரமாக விளம்பரப்படுத்தப் பட்டால், உலக சந்தையில் தற்போதைக்கு இதற்கு போட்டியில்லை என, அடித்துக் கூறுகின்றனர்.-ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !