உள்ளூர் செய்திகள்

சாதனை புரிய, படிப்பு முக்கியமல்ல!

படத்தில் இருப்பவர் பெயர், ஷாபி; கூலி வேலை செய்பவர். ஆனால், இவர், தமிழில் வெளிவந்த ஏராளமான கதைகளை, மலையாளத்தில் மொழி  பெயர்த்துள்ளார்.பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர், சாகித்ய அகாடமி விருது பெற்ற தோப்பில் முகமது மீரான் கதைகள் உட்பட, 250க்கும் மேற்பட்ட, தமிழ் சிறுகதைகள் மற்றும் 12 நாவல்களை, மலையாளத்தில் மொழி பெயர்த்துள்ளார்.தமிழ் சினிமா சுவரொட்டிகள் மற்றும் தமிழ் நாளிதழ்களை படித்து, தமிழ் கற்றுக்கொண்டதாக கூறும் இவர், கேரள மாநிலம் கோழிக்கோடு, தாழக்கண்டியில் வசித்து வருகிறார்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !