உள்ளூர் செய்திகள்

அட்சய திருதியை விரதம்!

அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளலாம். பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லுங்கள். பாயசம் அல்லது பொங்கல் நைவேத்யமாக சமர்ப்பிக்கலாம். அன்று முழுதும், 'ஓம் நமோ நாராயணா... ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ...' என சொல்ல, நன்மைகள் கிடைக்கும்.இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுதும் வீட்டில் தங்க மழை பொழிந்து கொண்டே இருக்கும் என்பது ஐதீகம். இப்படிப்பட்ட அட்சய திருதியை நாமும் கொண்டாடி, வாழ்வில் நலமும், வளமும் பெறுவோம்!அட்சய திருதியை நாளில்...*நலித்தோருக்கு உதவி செய்தால், மறு பிறவியில், ராஜயோக வாழ்க்கை அமையும்* ஆடைகள் தானம் கொடுத்தால், நோய்கள் நீங்கும்* பழங்கள் தானம் கொடுத்தால், உயர் பதவிகள் கிடைக்கும்* நீர் மோர், பானகம் போன்றவை கொடுத்தால், கல்வி அறிவு பெருகும்* தானியங்கள் தானம் கொடுத்தால், அகால மரணம் ஏற்படாது* தயிர் சாதம் அளித்தால், பாவ விமோசனமும், வாழ்வில் முன்னேற்றமும் ஏற்படும்* புண்ணிய நதியில் நீராடி, இறைவனை தொழுதால், வாழ்வில் குறையாத செல்வம் பெருகும்.அட்சய திருதியை மகிமை!அள்ள அள்ள குறையாத செல்வம் தரும் நாள், அட்சய திருதியை. கண்ணனின் திருவருளால் குசேலன், குபேரனான நாள்; நான்கு யுகங்களுள் கிருதாயுகம் தோன்றிய திருநாள்.'சயம்' என்றால், தேய்மானத்தையும், 'அட்சயம்' என்றால், குறைவில்லாதது என்றும் பொருள். இந்த அட்சய திருதியை நாள், சூரிய சஞ்சார அடிப்படையில் சித்திரை மாத வளர்பிறையில், அதாவது, அமாவாசைக்கு பின், மூன்றாம் நாள் வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !