இதப்படிங்க முதல்ல....
புது முயற்சி ஜெயா 'டிவி!'சன், 'டிவி'யைத் தொடர்ந்து, இப்போது ஜெயா, 'டிவி'யும் படங்கள் வினியோகம் செய்வதில் இறங்கியுள்ளது. கமலின், 'விஸ்வரூபம்,' ரஜினியின், 'கோச்சடையான்' ஆகிய படங்கள், அவர்களின் பார்வை வளையத்துக்குள் இருக்கிறது. இவை தவிர, சில பெரிய படங்களை வாங்கி, வெளியிடும் முயற்சியிலும் ஈடு பட்டுள்ளது ஜெயா 'டிவி'. — சினிமா பொன்னையா.'பில்லா - 2' நாயகிக்கு திருமணம்!அஜீத்துடன், 'பில்லா-2' படத்தில் பார்வதி ஓமணக்குட்டன், பிரேசில் அழகி புரூனா அப்துல்லா இருவரும் நாயகிகளாக நடித்துள்ளனர். இதில் புரூனா அப்துல்லா, மேற்கு வங்காளத்தை சேர்ந்த தன் காதலரை விரைவில் கைப்பிடிக்கிறார். இதற்காக, 'பில்லா-2' யூனிட்டையே பிரேசிலுக்கு வந்து தன்னை வாழ்த்துமாறு அன்பு< அழைப்பு விடுத்துள்ளார் புரூனா. அன்பின் பணியே இன்ப வாழ்வு!— எலீசா.மீண்டும் ரீமா சென்!கடந்த, 1981ல், தமிழில் வெளியான, 'சட்டம் ஒரு இருட்டறை' படம் பின்னர் இந்தியில், 'அந்தாகானூன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆனது. அந்த படத்தை, இப்போது மீண்டும் தமிழில் ரீ-மேக் செய்கின்றனர். இதில், இந்தியில் ஹேமமாலினி நடித்த ரோலில் நடிக்க கமிட்டாகியுள்ளார் ரீமா சென். திருமணத்துக்கு பின் முதன் முதலாக இப்படத்தில் நடிக்கும் ரீமா சென், இனி, வழக்கம் போல் தொடர்ந்து நடிக்கும் முடிவில் இருப்பதால், மேலும் சில படங்களில் நடிப்பது குறித்து பேசி வருகிறார். ஆடிய காலும், பாடிய நாவும் சும்மா இராது.— எலீசா.ஆபாசக் காட்சியில் திஷா பாண்டே!'தமிழ் படம்' என்ற படத்தில் நடித்த, திஷா பாண்டே தற்போது, 'சிக்கி முக்கி' என்ற படத்தில் நடித்து வருகிறார். கணவனிடம் அன்பு, பாசம் கிடைக்காமல், வேறு ஆண்மகனை நாடிச் செல்லும் மாறுபட்ட வேடத்தில் நடிக்கும் திஷா பாண்டே, படுக்கையறை காட்சிகளிலும், அரை நிர்வாண கோலத்தில் நடித்துள்ளார். கொடுக்கிறதை கொடுத்தால், குடம் கொண்டு தண்ணீருக்குப் போவாள்!— எலீசா.தனுஷை கவர்ந்த சிவகார்த்திகேயன்!'3' படத்தில் நடித்த போது தனுஷûம், சிவகார்த்திகேயனும் நண்பர்களாகி விட்டனர். அதன் பிறகும், அவ்வப்போது, அவரை அழைத்து காமெடியாக பேசி மகிழ்கிறார் தனுஷ். அதோடு, தற்போது சொந்த படம் ஒன்று தயாரிக்கும் தனுஷ், அதில் நாயகனாக நடிக்க சிவகார்த்திகேயனையே ஒப்பந்தம் செய்துள்ளார். அந்த அளவுக்கு , சிவகார்த்திகேயனின் காமெடி கலந்த நடிப்பு, தன்னை கவர்ந்துள்ளதாக கூறுகிறார் தனுஷ்.— சி. பொ.,தமிழுக்கு வரும் லட்சுமி மஞ்சு!'கடல்' படத்தில் சமந்தா ஒரு ஹீரோயினி என்றால், இன்னொரு ஹீரோயினாக, தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகள் லட்சுமி மஞ்சுவும் நடித்துள்ளார். 'மணிரத்னம் படம் என்றால், ஒரு காட்சியில் நடிக்க சொன்னாலும் நடிக்க வேண்டும் என்று தான் வந்தேன். ஆனால், அவரோ, என் சினிமா வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு, ஒரு வலுவான கதாபாத்திரத்தை தந்து, என்னை பெருமைப்படுத்தி விட்டார்...' என்கிறார் லட்சுமி மஞ்சு. கைக்குருவியைக் கொண்டுதான் காட்டுக் குருவியைப் பிடிக்க வேணும்!— எலீசா. குத்தாட்டத்துக்கு மாறிய சுஜா!குத்தாட்ட நடிகை சுஜா, தன் பெயரை, 'சுஜா வாருனி' என்று மாற்றி, ஹீரோயினியாக நடிக்க முயற்சி எடுத்தார். ஆனால், எந்த பலனும் இல்லை. அதனால், இப்போது, 'கேரக்டருடன் கூடிய குத்தாட்ட பாடல் கிடைத்தாலும் நடிப்பேன்...' என்று அறிவித்துள்ளார். அதை தொடர்ந்து தெலுங்கில் 'குண்டல்லோ கோதாவரி' என்ற படத்தில் குத்தாட்டத்துடன் நல்ல கேரக்டரில் நடிக்கவும் ஒரு சான்ஸ் கிடைக்க, தமிழிலும் அதுமாதிரி வாய்ப்புகளுக்காக தீவிர முயற்சி செய்து வருகிறார். அன்று அடிக்கிற காற்றுக்கு படல் கட்டிச் சாத்தலாம்!— எலீசா.அஜீத்துக்கு அதிர்ச்சி!இதுவரை சினிமா தொழிலில், விஜய் - அஜீத் இருவருக்குமிடையேதான், தொழில்முறை போட்டி நிலவி வந்தது. ஆனால், இப்போதோ, அஜீத்துக்கு இன்னொரு போட்டி நடிகராக, வளர்ந்து வருகிறார் கார்த்தி. அஜீத்தின், 'பில்லா - 2 ' படம், 24 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது என்றால், கார்த்தியின், 'சகுனி' 23 கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. இரண்டு பேருக்குமிடையே, ஒரு கோடிதான் வித்தியாசமே. இதனால், அதிர்ச்சியடைந்துள்ளார் அஜீத்.— சினிமா பொன்னையா.அவ்ளோதான்!