இதப்படிங்க முதல்ல....
தனுஷ் படத்தில் ஹாலிவுட், 'ஸ்டன்ட்' மாஸ்டர்!கயல் படத்தை அடுத்து, பிரபுசாலமன் இயக்கும், புதிய படத்தில் நடிக்கிறார் தனுஷ். மணிரத்னத்தின், அலைபாயுதே படம் போன்று, இப்படத்தின் முழுக்கதையும் ரயிலிலேயே நடக்கிறது. அதனால், ஒரு ரயிலை வாடகைக்கு பிடித்து, படப்பிடிப்பு நடத்துகின்றனர். மேலும், இப்படத்தில் அதிரடி ஆக் ஷன் காட்சிகளும் உள்ளன. அச்சண்டை காட்சிகளை ஹாலிவுட் படங்களுக்கு இணையாக படமாக்க வேண்டும் என்று நினைத்த பிரபுசாலமன், எக்ஸ்மேன், பேட்மேன், பிகின்ஸ் மற்றும் ஸ்கைபால் உள்ளிட்ட பல பிரம்மாண்ட ஹாலிவுட் படங்களுக்கு சண்டை பயிற்சி கொடுத்த, ரோகர் யுயன் என்பவரை, இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.—சினிமா பொன்னையாமகளுக்கு பட்டம் சூட்டச் சொல்லும் மாஜி நடிகை மேனகா!மாஜி நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ்; தமிழில், ரஜினிமுருகன் படத்தில் ஒப்பந்தமான இவர், அப்படத்தில் நடிக்கும் போதே, பாம்புசட்டை மற்றும் இது என்ன மாயம் போன்ற படங்களில் ஒப்பந்தமானவர், தற்போது, தனுஷை வைத்து பிரபுசாலமன் இயக்கும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.இதனால், மகளுக்கு தமிழில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என, முடிவு செய்த அவரது தாய்க்குலம் மேனகா, அடுத்தபடியாக மகளை மேல்தட்டு கதாநாயகர்களிடம் ஜோடி சேர்க்க, கல்லெறிந்து வருவதோடு, மகளுக்கு, 'அழகுப்புயல்' என்ற பட்டத்தை சூட்டுமாறும் இயக்குனர்களை கேட்டு வருகிறார்.-எலீசாசுயசரிதை எழுதும் தம்பி ராமைய்யா!வடிவேலுவின் காமெடி பாசறையில் எழுத்தராக இருந்தவர், தம்பி ராமைய்யா. அதையடுத்து, இந்திரலோகத்தில் நா.அழகப்பன் படத்தை இயக்கிய அவர், மைனா படத்தில் நடித்து, தேசிய விருது பெற்ற பின், முழு நேர நடிகராகி விட்டார். தற்போது, காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் அவர், தன்னைப் பற்றிய சுயசரிதையை எழுத துவங்கியுள்ளார். தன் கடந்த காலத்தில் சந்தித்த இனிப்பான மற்றும் கசப்பான சமாசாரங்கள் அனைத்தையும், அப்புத்தகத்தில் எழுதுகிறார்.— சினிமா பொன்னையாவிஜய் - அஜித்துக்கு அதிர்ச்சி கொடுத்த ராகவா லாரன்ஸ்!சமீபகாலமாக, விஜய் மற்றும் அஜித் நடிக்கும் படங்கள் தான், வசூல் ரீதியாக முன்னணி வகித்து வந்தன. இந்நிலையில், சமீபத்தில், ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்து வெளியான, காஞ்சனா-௨ படம் தமிழ் மற்றும் தெலுங்கு என, இரு மொழிகளையும் சேர்த்து, இதுவரை, 108 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. அத்துடன், இன்னமும் பல ஏரியாக்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த வசூல், விஜய் மற்றும் அஜித் படங்கள் இதுவரை செய்த வசூலை விட அதிகம் என்பதால், அவர்கள் வட்டாரத்துக்கு இச்செய்தி தெரியவர, சற்றே அதிர்ச்சியடைந்துள்ளனர்.-சி.பொ.,கறுப்பு பூனை!பீட்சா நடிகை, நடிகர்களிடம் இடைவெளி விட்டே பழகி வந்ததால், அவருடன் நடிக்க எந்த நடிகரும் விரும்புவதில்லை. அதனால், தற்போது பட வாய்ப்புகளை இழந்துள்ளார். மீண்டும் பட வாய்ப்புகளை கைப்பற்ற, சில நடிகர்களுடன் நெருக்கமாக பழக களமிறங்கியுள்ளார். ஆனால், அவர் உடல், முன்பை விட பெருத்து ஆன்ட்டி மாதிரி இருப்பதால், அவரை கண்டாலே நடிகர்கள் எகிறி ஓடுகின்றனர்.பெல் காமெடியன் ரீ-என்ட்ரியில் நடித்து முடித்துள்ள இரண்டு படங்களுமே வியாபாரமாகவில்லை. இருப்பினும், தான் மூன்றாவதாக நடித்து வரும் படத்திற்கு, பிரபல கதாநாயகர்கள் வாங்கும் அளவுக்கு சம்பளம் கேட்டுள்ளார். இதனால், 'இவர் நடித்த இரு படமும் கிடப்பில் கிடக்கும் போது, இவரை வைத்து படம் எடுப்பதே பெரிய விஷயம்; இதில் பெரிய சம்பளம் வேறு கேட்கிறாரே...' என்று அப்பட தயாரிப்பாளர் புலம்பி வருகிறார்.சினி துளிகள்!* அட்டகத்தி தினேஷ் நடிக்கும், ஒரு நாள் கூத்து என்ற படத்தில், நிவேதா பெத்துராஜ் நாயகியாக நடிக்கிறார். இவர், ஐக்கிய அரபு எமிரேட்சில், மிஸ் இந்தியா பட்டம் வென்றவர்.* திருநங்கை மீது ஒருவன் காதல் கொள்வது போன்ற ஒரு கதையை, மம்முட்டியை வைத்து படமாக்குகிறார், தங்கமீன்கள் ராம்.* தமிழில், 'பை பை பை கலாச்சி பை...' என, சில ஹிட் பாடல்களை பாடிய நடிகை ரம்யா நம்பீசன், தற்போது, மலையாளத்தில் இரு படங்களில், பாடியுள்ளார்.* கவுண்டமணி நடித்து வரும், எனக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை படத்தின் தலைப்பிலேயே இன்னொரு படமும் வளர்ந்து கொண்டிருப்பதால், ரிலீஸ் நேரத்தில் பஞ்சாயத்து நடக்கும் என்று தெரிகிறது.அவ்ளோதான்!