இதப்படிங்க முதல்ல...
பரபரப்பை ஏற்படுத்திய, கங்கனா ரணாவத்!மணிகர்னிகா படத்தை அடுத்து, பாலிவுட் நடிகை, கங்கனா ரணாவத், தன் சுயசரிதையை படமாக்கப் போவதாக செய்தி பரவியது. அதோடு, தனக்கு பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தவர்களின் முகத்திரையை, அந்த படத்தில் அவர் கிழித்தெறியப் போவதாகவும் கூறினர். ஆனால், அதுபற்றி, கங்கனா ரணாவத் கூறுகையில், 'எல்லா நடிகையரையும் போலவே, நானும் சினிமாவில் பாலியல் ரீதியாக, பல கசப்பான மனிதர்களை சந்தித்தேன். என்றாலும், என் சுயசரிதை படத்தில், 'மீடூ' விவகாரங்களை சொல்லி, ரசிகர்களை போரடிக்க விரும்பவில்லை. அழுக்கான மனிதர்களையும், அசிங்கமான விஷயங்களையும் மறந்து, நான் கடந்து வந்த சில உயர்வான விஷயங்களையே படத்தில் பதிவு செய்யப் போகிறேன்...' என்கிறார்.— சினிமா பொன்னையாகார்த்தி வேண்டாம்!பாண்டிராஜ் இயக்கத்தில், கார்த்தி நடித்த, கடைக்குட்டி சிங்கம் படம், கடந்த ஆண்டு வெளியாகி, பெரும் வெற்றி பெற்றது. தற்போது, அதேபோன்று கிராமத்து கதையை இயக்க, பாண்டிராஜ் திட்டமிட்டுள்ளார். அதிலும், கார்த்தி நடிக்க, அவரது அண்ணன், சூர்யா தயாரிக்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், 'அந்த படத்திற்கு, கார்த்தி வேண்டாம்...' என, பாண்டிராஜ் தெரிவித்திருப்பதால், சூர்யா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.— சி.பொ.,'டென்ஷன்' செய்த, அனுபமா!தமிழில், ராட்சசன் படத்தில், நாயகியாக நடித்த, அமலாபால், அந்த படம், தெலுங்கில், 'ரீ - மேக்' செய்யப்படுவதால், அதிலும் தான் நாயகியாக நடிக்க முண்டியடித்தார். ஆனால், கடைசி நேரத்தில், கொடி படத்தில், தனுஷுக்கு ஜோடியாக நடித்த, அனுபமா பரமேஸ்வரன் அந்த வாய்ப்பை கைப்பற்றி, அமலாபாலுக்கு அதிர்ச்சி கொடுத்து விட்டார். அதோடு, 'அமலாபாலை விடவும், மாறுபட்ட நடிப்பை படத்தில் வெளிப்படுத்துவேன்...' என்றும் சொல்லி, அவரை, 'டென்ஷன்' செய்துள்ளார். ஆளை எய்க்குமாம் நரி; அதை ஏய்க்குமாம் ஒற்றைக்கால் நண்டு!- எலீசா'கெத்து' காட்டிய, சந்தானம்!கதாநாயகனாக சந்தானம், உருவான போது, அவருடன், 'டூயட்' பாட, கோலிவுட் நடிகையர் யாரும் முன்வரவில்லை. அதனால், 'இனிமேல், என் படங்களில் வேற்று மாநில நடிகையர் தான் நடிப்பர்...' என்று கூறிய, சந்தானம், இப்போது வரை, தெலுங்கு மற்றும் இந்தி நடிகையருடன் தான், 'டூயட்' பாடி வருகிறார். தற்போது, அவரது, 'ஹீரோ மார்க்கெட்' உயர்ந்திருப்பதை அடுத்து, சில கோலிவுட் நடிகையர், அவருடன் நடிக்க, துாது விட்டுள்ளனர். ஆனபோதும் இறங்கி வராத, சந்தானம், 'என் பட்டியலில், பல இந்தி நடிகையர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம், 'சான்ஸ்' கொடுத்த பின், உங்களை நடிக்க வைப்பது பற்றி யோசிக்கிறேன். அதுவரைக்கும், 'வெயிட்' பண்ணுங்க...' என்று, தன், 'கெத்'தை காண்பித்துள்ளார். — சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!* தளபதி நடிகர், தற்போது நடித்து வரும், புதிய படத்திற்காக போடப்படும் சில அரங்கங்களை யாரோ படம்பிடித்து, 'சோஷியல் மீடியா'வில் போட்டு விட்டனர். அதிர்ச்சியடைந்த படக்குழு, இதுகுறித்து விசாரித்தபோது, தளபதியுடன் பாதுகாப்பு படையில் இருந்தவர்கள் தான் இந்த வேலையை செய்தது தெரிந்தது. அதனால், வேலியே பயிரை மேய்ந்த கதையாகி விட்டதை நினைத்து, வருந்திய தளபதி, தன் பாதுகாப்பு படைத்தளபதிகளை கூண்டோடு நீக்கி, புதியவர்களை நியமித்துள்ளார்.'நம்ம ஸ்கூல் தமிழ் வாத்தியாரின், 60ம் ஆண்டு பிறந்த நாளுக்கு, அவர்கிட்ட படிச்ச நாமெல்லாம், அவருக்கு வீடு கட்டி தர, கமுக்கமா வேலை பார்த்துட்டு இருக்கிறோம். ஆனால், இவன் அந்த விஷயத்தை, ஊரெல்லாம், 'டமாரம்' அடிச்சுட்டு வர்றான்...' என்று கோபித்துக் கொண்டான், நண்பன் விஜய்.* பால் நடிகை, சுள்ளான் நடிகருடன் அதிக நெருக்கம் காட்டி, அவரது, 'இமேஜை' கெடுத்து விட்டதை அடுத்து, மேற்படி நடிகை வருகிறார் என்றாலே, திருமணமான நடிகர்கள் ஓடி ஒளிகின்றனர். இதனால், தன், வழியை மாற்றியிருக்கும் நடிகை, வேகமாக வளர்ந்து வரும், இளவட்ட நடிகர்களுக்கு கல்லெறிந்து வருகிறார். அதிலும், தனக்கு வளைந்து கொடுக்கும் நபர்கள் என்று தெரிந்தால், 'வீக் எண்ட் பார்ட்டி'க்கு அழைப்பு விடுகிறார். நடிகையின் இந்த, 'சீக்ரெட் பார்ட்டி' விவகாரம், கோலிவுட்டில் கசிந்ததை அடுத்து, இளம் நடிகர் பட்டாளம், அம்மணியை முற்றுகையிட்டு வருகிறது.தோழிகள் இருவர்: 'நம்ம கூட, 'டியூஷ'னுக்கு வருவாளே, அமலா பொண்ணு, அமுல் பேபி மாதிரி இருந்தா... இப்போ என்னடான்னா உரிச்ச கோழியாட்டம், செம, 'மார்டனா' ஆயிட்டாடி... அவ அம்மாகிட்ட கண்டிக்கச் சொல்லலாமா...''நமக்கேண்டி வம்பு... அவளாச்சு... அவ அம்மா ஆச்சு...' என்றாள்.சினி துளிகள்!* அட்லி இயக்கத்தில், விஜய் நடித்து வரும், 63வது படம், பெண்களின் கால்பந்தாட்ட விளையாட்டை மையப்படுத்திய கதையில் உருவாகிறது.* ஆடை படத்தில், மிக கவர்ச்சியாக நடித்து வரும், அமலாபால், 'இந்த படத்தின் வெற்றி தான், தமிழ் சினிமாவில், என் எதிர்காலத்தை தீர்மானிக்கும்...' என, கூறி வருகிறார்.அவ்ளோதான்!