உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

ஏ.ஆர்.ரஹ்மான் இசையை மாற்றிய, மணிரத்தினம்!கல்கி எழுதிய,பொன்னியின் செல்வன் சரித்திர கதையை படமாக்கப் போகிறார், மணிரத்தினம். 850 கோடி ரூபாயில் தயாராகும் இப்படத்தின், 12 பாடல்களையும், படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பே, ஏ.ஆர்.ரஹ்மானை வைத்து ஒலிப்பதிவு செய்து விட்டார். அதோடு, மேற்கத்திய பாணியில் இசையமைக்கும் ரஹ்மானை, இந்த படத்தில், முழுக்க முழுக்க, நம் பாரம்பரிய  இசைக்கருவிகளை பயன்படுத்த வைத்துள்ளார், மணிரத்தினம்.- சினிமா பொன்னையாரூ.10 கோடிக்கு மயங்காத, ஷில்பா ஷெட்டி!ஒரு ஆயுர்வேத மருந்து நிறுவனம், 44 வயதிலும் உடம்பை, 'பிட்' ஆக வைத்திருக்கும் பாலிவுட் நடிகை, ஷில்பா ஷெட்டியை அணுகியது. 'எங்களின் மருந்துகளை சாப்பிட்டதால் தான், இப்படி, 'பிட்' ஆக இருப்பது போல், விளம்பர படத்தில் நடித்தால், 10 கோடி ரூபாய் சம்பளம் தருகிறோம்...' என கூறியிருக்கிறது. அதற்கு, 'உடம்பை, 'பிட்' ஆக வைத்திருக்க, நாம் பின்பற்றும் வாழ்க்கை முறை தான் காரணம். மருந்து, மாத்திரைகளால் அதை சரி செய்யவே முடியாது. அதனால், நீங்கள் தரும் பணத்திற்கு ஆசைப்பட்டு, மக்களை தவறான வழிக்கு திருப்ப, நான் தயாராக இல்லை...' என்று, அந்த விளம்பர படத்தில் நடிக்க மறுத்து விட்டார், ஷில்பா. இருக்கிற இடத்தில் இருந்தால், எல்லாம் சுகம்.—எலீசாயாஷிகா ஆனந்த் எடுத்த, அதிர்ச்சி முடிவு!நடிகை யாஷிகா ஆனந்த், திடீரென்று, தன் உடல் எடையை குறைத்து, 'ஸ்லிம்' ஆகி விட்டார். காரணம் கேட்டால், 'உடம்பு சதை போட்டால், நான் அதிக கவர்ச்சியாக தெரிகிறேன். அதனால், நான் சாதாரணமாக நடித்தாலும், கேமரா கண்கள், கவர்ச்சியாக காட்டுகின்றன. கவர்ச்சி நடிகை என்று ஆரம்பத்தில் சொன்னவர்கள், இப்போது, ஆபாச நடிகையாக்கி விட்டனர். அந்த, 'இமேஜை' மாற்றவே, உடல் எடையை குறைத்து, உடல் கவர்ச்சியை குறைத்திருக்கிறேன்...' என்கிறார். ஆனால், அவர் வெளியிட்ட, 'ஸ்லிம்' புகைப்படங்களை பார்த்து, அவரது ரசிக கோடிகள், 'எங்களது, கவர்ச்சி கன்னியை காணவில்லையே...' என்று, பலத்த அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். அது அதற்கு ஒரு கவலை; ஐயாவுக்கு எட்டுக் கவலை!- எலீசாகமல் மகளின் பெரிய ஆசை நிறைவேறுமா?கமலின் இளைய மகள், அக்சரா ஹாசன், மணிரத்தினத்திடம், உதவி இயக்குனராக இருந்தவர். ஆனால், அக்காள் ஸ்ருதிஹாசனைப் போலவே, அவரும் நடிகையாகி விட்டார். தமிழில், வேதாளம் மற்றும் கடாரம் கொண்டான் போன்ற படங்களில் நடித்த, அக்சரா ஹாசனுக்கு, தற்போது, படம் இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. 'ரஜினி, கமலை வைத்து படம் இயக்க வேண்டும். அதிலும், அவர்களை ஒரே படத்தில் இணைக்க வேண்டும் என்பது, என் ஆசை. ஆனால், அது நடக்குமோ, நடக்காதோ தெரியவில்லை. இருப்பினும், முயற்சி எடுக்கப் போகிறேன்...' என்று கூறி, கோலிவுட் இயக்குனர்களை அதிர வைத்துள்ளார், அக்சரா ஹாசன்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!இஞ்சி இடுப்பழகி நடிகை, மீண்டும், 'கொழு கொழு' பொம்மையாகி விட்டதால், அவரது உருவத்தை வைத்து, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு இணையதளம், கேலி சித்திரம் வரைந்து விட்டதாம். அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அம்மணி, அந்த இணையதளம் சம்பந்தப்பட்டவர்களை தொடர்பு கொண்டு, கெட்ட வார்த்தைகளால் திட்டித் தீர்த்து விட்டார். ஆனால், அந்த, 'மீடியா'வினரோ, மறுநாள், அம்மணி திட்டிய வாசகங்களை வைத்து, இன்னொரு கேலி சித்திரம் வெளியிட்டு, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டனர். இதனால், இந்த விஷயத்தில் மோதினால், ஊதி, பெரிதாக்கி கொண்டே இருப்பர் என்று, அமைதியான நடிகை, தற்போது, 'மீடியா'க்களை சந்திப்பதையும் தவிர்த்து வருகிறார். 'பலரும் பாராட்டும்படியா, பெரிய விளையாட்டு வீராங்கனையா வரப்போற அனுஷ்கா நீ... எதிர்மறையான விமர்சனத்தைப் படிச்சுட்டு பொங்கி எழலாமா... அதெல்லாம் உனக்கு வெற்றி படிக்கட்டுதான்னு நினைச்சுட்டு, மேலே மேலே முன்னேறிட்டு போவியா... அதைவிட்டு, இடிஞ்சுப் போய் உட்கார்ந்துட்டு இருக்கியே...' என்று ஊக்கமளித்தாள், தோழி.சினி துளிகள்!* அனுஷ்கா நடித்து வரும், சைலன்ஸ் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலத்தில் தயாராகி வருகிறது.* குத்துப் பாடலுக்கு நடனமாட, தான் ஒரு படத்தில் நடிக்கும் சம்பளத்தில் பாதியை கேட்கிறார், தமன்னா.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !