இதப்படிங்க முதல்ல...
விஜய் சேதுபதிக்கு ரூ.10 கோடி சம்பளமா?பேட்ட படத்தில் வில்லனாக ரஜினியுடன் மோதிய விஜய் சேதுபதி, இப்போது விஜயின், 64வது படத்திலும் வில்லனாக நடிப்பது உறுதியாகி இருக்கிறது. மேலும், 'ஹீரோ' ஆக நடிக்க வாங்குவது போல், இந்த படத்தில் நடிப்பதற்கும் விஜய் சேதுபதிக்கு, 10 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்படுவதாக பரபரப்பு செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், விஜய் படத்தில் தான் நடிப்பது பற்றி மட்டும் உறுதிப்படுத்திய விஜய்சேதுபதி, இந்த, 10 கோடி ரூபாய் விவகாரம் பற்றி, இதுவரை வாய் திறக்கவே இல்லை.— சினிமா பொன்னையாநயன்தாராவிற்காக பட்டினி கிடக்கும், யோகிபாபு!கோலமாவு கோகிலா படத்தில், நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் வேடத்தில் நடித்த, யோகிபாபுவிற்கு, அடுத்து அவருடன், 'டூயட்' பாட வேண்டும் என்கிற விபரீத ஆசையும் ஏற்பட்டுள்ளது. தன் விருப்பத்தை, நயன்தாராவிடம் சொன்ன போது, 'சந்தானம் மாதிரி நீங்களும், உடம்பை, 'ஸ்லிம்' பண்ணி வாருங்கள். நானே, உங்களை, துரத்தி துரத்தி காதலிக்கிறேன்...' என்று கூறியுள்ளார். விளைவு, கடுமையான உடற்பயிற்சி, 'டயட்ஸ்' என்று பட்டினி கிடந்து, உடம்பை குறைக்கும் விஷப்பரீட்சையில் இறங்கியிருக்கிறார், யோகிபாபு.— சி.பொ.,மாற்றுத்திறனாளி வேடத்தில், அனுஷ்கா!அதிரடியான வசனம் பேசி, ஆவேசமாக நடித்து வந்துள்ள அனுஷ்கா, தற்போது, சைலன்ஸ் என்ற படத்தில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணாக நடித்துள்ளார். அதோடு, இந்த படத்தில், எந்த கதாபாத்திரத்தினரும் வசனம் பேச மாட்டார்கள். வசனமே இல்லாமல் உருவாகி இருக்கும் இந்த படத்தில், ஓவியம் வரையும் பெண்ணாக நடித்துள்ள, அனுஷ்கா, தன் மனதில் தோன்றும் விஷயங்களை, அதன் மூலம் மற்றவர்களுக்கு உணர்த்துவார். 'ஒரு வார்த்தை கூட பேசாமல் நடித்தது, எனக்கு மிகவும் சவாலாக இருந்தது...' என்கிறார்.— எலீசாரகுல் பிரீத் சிங்கின், 'சைடு பிசினஸ்!'தெலுங்கானா தலைநகர், ஐதராபாத் மற்றும் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உடற்பயிற்சிகூடம் நடத்தி வரும், ரகுல் பிரீத் சிங், அடுத்து, விளையாட்டு துறையிலும் இறங்கி விட்டார். ஐ.பி.எல்., கிரிக்கெட் அணியை வாங்கி, சினிமாவில் நடித்து சம்பாதிக்கும் பணத்தை, அதில் முதலீடு செய்து வருகிறார். இதையடுத்து, உலக தரத்தில் அழகு நிலையங்கள் திறக்கும் யோசனையும் வைத்துள்ளார், ரகுல் பிரீத் சிங். காற்றுள்ள போதே துாற்றிக்கொள்!— எலீசாசாயிஷாவின் சினிமா கனவு!ஆர்யாவை திருமணம் செய்து கொண்ட பிறகும், சினிமாவில் தொடர்ந்து நடித்து வரும் சாயிஷா, உடல் எடை அதிகரிக்காமல், கட்டுக்கோப்பாக பராமரித்து வருகிறார். அதோடு, சிறப்பான நடன பயிற்சி பெற்றுள்ள அவருக்கு, தன் நடன திறமைக்கு தீனி போடும் வேடம், இதுவரை கிடைக்கவில்லை. அதனால், 'நடனத்தை மையப்படுத்திய கதையை படமாக்கும் இயக்குனர்கள், எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம். சலுகை அடிப்படையில் நடித்து தர தயாராக இருக்கிறேன்...' என்று, கோலிவுட்டில் தகவல் வெளியிட்டுள்ளார்.— எலீசாகறுப்புப் பூனை!தளபதி நடிகர், தன் புதிய படம் வெளியாகும் நேரத்தில், அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி பரபரப்பை உருவாக்கியதால், ஆளும் கட்சி வட்டாரம், அவர் மீது அதிருப்தியில் உள்ளது. அதையடுத்து, தளபதி பட வட்டாரத்திற்கு, 'டார்ச்சர்' கொடுத்து வரும் அமைச்சர்கள், மேற்படி படத்திற்கு எதிராக சிலரை, போராட்டம் நடத்த துாண்டி விட்டனர். ஆனால், தளபதி நடிகரோ, தன் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து, அந்த போராட்டக் குழுவில் உள்ளவர்களுக்கு கணிசமான கரன்சிகளை வெட்டி, போராட்டத்தை, 'வாபஸ்' வாங்க வைத்து விட்டார். தளபதியின் இந்த அதிரடி அரசியலால், ஆளும் கட்சி வட்டாரம் அதிர்ச்சியடைந்துள்ளது.'டேய் விஜய்... நாம வேலை செய்யற கம்பெனிக்கு எதிரா, நீ நடந்துக்கிறதாகவும், இங்குள்ள ரகசியத்தை போட்டி கம்பெனிக்கு தகவல் தர்றதாகவும், உன் மீது, முதலாளியிடம் புகார் சொல்லி இருக்கானாம்டா, நம்ம குமார்...' என்றான், நண்பன்.'குமார் தங்கச்சியை, நான் கல்யாணம் கட்டிக்கலைன்னு, அவனுக்கு என் மீது கோபம். அதான், இப்படியெல்லாம் பொய் புகார் சொல்லிட்டு திரியறான். அவனை நான் சரி கட்டறேன்...' என்றான், விஜய்.சினி துளிகள்!* பிகில் படத்தை அடுத்து, தான் நடிக்கும், 64வது படத்தில், கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார், விஜய்அவ்ளோதான்!