இதப்படிங்க முதல்ல...!
விஜய் ஏற்படுத்தும் பரபரப்பு!விஜய் நடித்த, பிகில் படம், எதிர்பார்த்த, வெற்றி கிடைக்கவில்லை. அதனால், அடுத்த படத்தை, 'சூப்பர் ஹிட்'டாக கொடுக்க மெனக்கெடுகிறார், விஜய். அதோடு, தன்னைச் சுற்றி ஏதேனும் பரபரப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும் என்பதற்காக, ஆந்திரா, கர்நாடகா என, எந்த மாநிலத்தில் படப்பிடிப்புக்கு சென்றாலும், அங்குள்ள தன் ரசிகர்களை, மிகப்பெரிய வரவேற்பு கொடுக்க வைத்து, அந்த மாநிலங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.சினிமா பொன்னையா'பிக்பாஸ்' நடிகைகளின் கவர்ச்சி தர்பார்!'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்று, பிரபல நடிகையாகியுள்ள, யாஷிகா ஆனந்த், 'இன்ஸ்டாகிராமில்' படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இப்போது, 'பிக்பாஸ்' நடிகையான, சாக் ஷி அகர்வாலும், யாஷிகாவை மிஞ்சும் வகையில், தன் அதிரடி புகைப்படங்களை வெளியிட்டு, 'டப்' கொடுத்து வருகிறார். இதனால், கடுப்பாகிப் போன, யாஷிகா, இன்னும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட, பதிலுக்கு, சாக் ஷியும் வெளியிட்டுள்ளார். 'சோஷியல் மீடியா'வில், இரண்டு அம்மணிகளும், கவர்ச்சி தர்பார் நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஏட்டிக்குப் போட்டி, எகனைக்கு மொகனை!எலீசாசட்டையை கழற்றி, 'போஸ்' கொடுத்த நடிகை!கன்னங்குழி நடிகையான, சிருஷ்டி டாங்கே நடிக்க வந்தபோதே, அவரை, தாராள கவர்ச்சி வழங்க கூறினர். ஆனால், அம்மணியோ, 'நான், உடம்பை காட்டி, சம்பாதிக்க வரவில்லை; என் திறமைக்கு வாய்ப்பு கொடுங்கள். இல்லையேல், ஆளை விடுங்கள்...' என்று, முகத்தை திருப்பிக் கொண்டார். இப்போது, பட வாய்ப்பே இல்லாத நிலையில், தன் மேலாடையை கழற்றி, 'போஸ்' கொடுக்கும் கவர்ச்சி புகைப்படங்களை அள்ளி தெளித்து, அசைவப் பட இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். எடுத்து வைத்தாலும், கொடுத்து வைக்க வேண்டும்!எலீசாகொடூர வில்லனுக்கு தடை போடும், விஜய்சேதுபதி!ரஜினியைத் தொடர்ந்து, விஜய் படத்திலும், வில்லனாக நடித்து வரும், விஜய்சேதுபதி, அப்படி நடிப்பதற்கு, சில கட்டுப்பாடுகளும் விதிக்கிறார். அதாவது, நானும் கதாநாயகனாக நடித்து வருவதால், கொடூரமான வில்லனாக சித்தரித்து விடாதீர்கள் என்றும், சண்டை காட்சிகளில், கதாநாயகர்கள், தன்னை ஓவராக துவம்சம் செய்வது போன்று, காட்சிகளை வைப்பதற்கும், தடை போட்டு வருகிறார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!திருமணம் செய்து, இரண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாகி விட்ட, வாளமீன் நடிகை, மீண்டும் சினிமாவில், 'ரீ-என்ட்ரி' கொடுக்க தயாராகி விட்டார். அதோடு, நள்ளிரவு, 'சோமபான பார்ட்டி'களில் கலந்துகொள்ளவும் தயார் என்பதை கோலிவுட் அன்பர்களுக்கு வெளிப்படுத்தும் வகையில், ஒரு, 'பார்ட்டி'யில், தான் சரக்கடிக்கும் புகைப்படத்தை இணைய பக்கத்தில் வெளியிட்டு, அபிமானிகளுக்கும் போதை ஏற்றி விட்டுள்ளார், அம்மணி.'அதோ போறாளே... அவ, கோடி வீட்டு காதம்பரியோட பொண்ணு, மாளவிகா தானே...''ஆமாம்... அவளே தான். என்ன இப்படி மாறி போயிட்டா...''கண்ணாலம் கட்டி, புள்ளையும் பெத்தாச்சு... இவளுக்கு இந்த அலங்கோல அலங்காரம் தேவையா... 'டிக் - டாக்'ல வேற, அரை குறை, 'டிரஸ்' போட்டுட்டு, 'குடிமகள்' போல், 'போஸ்' கொடுத்து நடிச்சிருக்காளாம். என் பையன், 'பேஸ்புக்'ல பார்த்துட்டு சொன்னான்...' என்று புலம்பினர், இரு பெண்மணிகளும்.சினி துளிகள்!* சமீபத்தில் கோலிவுட்டுக்கு, 'விசிட்' அடித்த மாளவிகா, தன் அபிமான இயக்குனர்களை சந்தித்து, மீண்டும் நடிப்பதற்கு வாய்ப்பு கேட்டு வருகிறார்.அவ்ளோதான்!