உள்ளூர் செய்திகள்

இதப்படிங்க முதல்ல...

மீண்டும் அக்கப்போரை துவங்கிய, ராஷ்மிகா - பூஜா ஹெக்டே!தெலுங்கு சினிமாவில் மையம் கொண்டுள்ள, ராஷ்மிகா மந்தனா-, பூஜா ஹெக்டே ஆகிய இருவரும் முன்வரிசை, 'ஹீரோ'களின் படங்களை கைப்பற்றுவதில், போட்டா போட்டியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், இருவரும் குடுமிப்புடி சண்டை போடாத குறையாக, பேட்டிகளில் ஒருவரையொருவர், சகட்டுமேனிக்கு விமர்சிப்பது வழக்கமாகி விட்டது. இப்படியான நிலையில், சுல்தான் படத்திற்கு பிறகு, தமிழில் தொடர்ந்து நடிப்பதற்கு, பட வேட்டையில், ராஷ்மிகா ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது எதிர்பாராத விதமாக, விஜயின், 65வது படத்தை, தடாலடியாக கைப்பற்றி, கோலிவுட்டிலும், ராஷ்மிகாவுக்கு, 'டப்' கொடுக்க, களமிறங்கி விட்டார், பூஜா ஹெக்டே. இதனால், மறுபடியும், மேற்படி நடிகையருக்கிடையே, டோலிவுட்டைப் போன்று, கோலிவுட்டிலும், அதிரடி அக்கப்போர் ஆரம்பமாகி இருக்கிறது.— சினிமா பொன்னையாவில்லன் வேடங்களுக்கு கிராக்கி ஏற்படுத்திய, விஜய் சேதுபதி!'ஹீரோ'வாக நடிப்பவர்கள், வில்லனாக நடித்தால், 'ஹீரோ' மார்க்கெட் போய் விடும் என்பது தான், சினிமா உலகின் நம்பிக்கையாக இருந்தது. அந்த நம்பிக்கையை அடித்து உடைக்கும் வகையில், 'ஹீரோ-' - வில்லன் என, இரண்டு விதமான வேடங்களிலும் நடித்து, 'ஸ்கோர்' பண்ணி வருகிறார், விஜய் சேதுபதி. இதன் காரணமாக, இதுவரை, 'ஹீரோ' என்ற, ஒருவழி பாதையில் மட்டுமே சென்று கொண்டிருந்த, பிரபுதேவா, ஆர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் உட்பட பல நடிகர்களும், வில்லன் வேடம் பக்கம் திரும்பியுள்ளனர். இதனால், இதுவரையில்லாத அளவுக்கு, கோலிவுட்டில், வில்லன் வேடங்களுக்கு கிராக்கி அதிகரித்துள்ளது.சி.பொ.,சாய்பல்லவி போடும், அதிரடி பட்டியல்!பெரும்பாலும், 'ஹீரோ'கள் தான், இயக்குனர்கள் கதை சொல்லும்போது, 'ரசிகர்கள், இந்த மாதிரி தான், திரையில் என்னை பார்க்க ஆசைப்படுகின்றனர். அதற்கேற்ப காட்சிகளை மாற்ற வேண்டும்...' என்று சொல்வர். அதேபோன்று, சாய்பல்லவியும், ரசிகர்கள், தன்னை, திரையில் எந்த மாதிரி பார்க்க விரும்புகின்றனர் என்பதை, இயக்குனர்களிடம் பட்டியலிடுகிறார். அதில், 'ஹீரோ'வுக்கு இணையான வேடம், 'ஓவர் கிளாமர்' காட்டக் கூடாது, ஓவராக அழுது வடியக் கூடாது என, பல, 'கண்டிஷன்'களை அடுக்குகிறார். முக்கியமாக, இயக்குனர்களின் கதையும், கதாபாத்திரமும், தனக்கு ஒத்து வந்தால் மட்டுமே, அந்த படத்தில் நடிக்க, ஓ.கே., சொல்கிறார். இல்லையேல், 'இந்த கதை, எனக்கு, 'செட்'டாகாது; வேற நடிகையை பார்த்துக்கோங்க...' என்று, கூலாக சொல்லி, திருப்பி அனுப்பி விடுகிறார்.— சினிமா பொன்னையாகறுப்புப்பூனை!மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது, அபிமான, 'ஹீரோ'கள், 'பார்ட்டி'களுக்கு அழைத்தால், படை சூழ தான், 'விசிட்' அடிப்பார், அந்த வாரிசு நடிகை. இப்போது அப்படியல்ல, இரண்டாம்தட்டு, 'ஹீரோ'கள் அழைப்பு விடுத்தாலும், தனி ஆளாக சென்று வருகிறார். இப்படி, 'சோலோ'வாக, 'விசிட்' அடித்தால் தான், சினிமாவில் கோலோச்ச முடியும் என்கிற வித்தை தெரிந்த நடிகையின் பெற்றோரும், கண்டுகொள்வதில்லை. இதனால், ஆரம்பத்தில், 'பார்ட்டி'களுக்கு சென்ற வேகத்திலேயே திரும்பி வந்த நடிகை, சமீபகாலமாக, அடித்த சரக்கு தெளிந்து, அதிகாலையில் தான் வீட்டுப்பக்கம் தலை காட்டுகிறார். 'நம்ம கம்பெனி யூனியன் செகரட்டரியா பதவி உயர்வு பெற்று வந்தாளே, கீர்த்தி, அவளைத் தெரியும்தானே உனக்கு?''ஆமாம்... அவளுக்கென்ன?''வந்த வேகத்துல, வெற்றி முரசு கொட்டுவேன்; வீரமணி கட்டுவேன்னு சொல்லிட்டு, அதை செய்வேன்; இதை செய்வேன்னு, 'உதார்' விட்டா. ஆனா, ஒண்ணும் வேலைக்கு ஆகல. யூனியன் தலைவர் கூப்பிட்டு, வெட்டி பந்தா காட்டுவதை விட்டு, உருப்படியா எதையாவது சாதித்துக் காட்டுன்னு, 'டோஸ்' விட்டுட்டாரு.'இப்ப, யூனியன் உறுப்பினர்களை கூட்டு சேர்த்துட்டு, கூத்தடிச்சிட்டு இருக்கு...' என, இருவர் பேசி சிரித்தனர். சினி துளிகள்!* சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த பின், எந்த நடிகையின் வாழ்க்கை வரலாறு படம் உருவானாலும், முதல் நபராக, 'விசிட்' அடித்து, பட வேட்டை நடத்துகிறார், கீர்த்தி சுரேஷ்.* தலைவி படத்தின் நாயகியான, ஹிந்தி நடிகை, கங்கனா ரணாவத், 'இப்படத்தை இயக்கியுள்ள, ஏ.எல்.விஜயை போன்று, இதுவரை யாரும் என்னிடத்தில் மரியாதையாக நடந்து கொண்டதில்லை...' என்கிறார்.* விஜய் நடிப்பில் தெறி, மெர்சல் மற்றும் பிகில் படங்களை இயக்கிய அட்லி, அடுத்தபடியாக, பாலிவுட் நடிகர் ஷாரூக்கானை வைத்து, ஒரு மெகா படத்தை இயக்க, தயாராகி வருகிறார்.அவ்ளோதான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !