முன்னாள் போராளி; இன்று மத போதகர்!
கேரளா மாநிலம், வயநாடு, வரி நிலம் ஆதிவாசி காலனியில் வசிக்கும் இவர் பெயர், கோனி. பெந்தகோஸ்து மத போதகராக இருக்கும் இவர், கடந்த, 1970ல் கேரள போலீசாருக்கு, சிம்ம சொப்பனமாக விளங்கியவர். ஆதிவாசிகளை, மாடு மாதிரி வேலை வாங்கி, கூலி கேட்டால், அடித்து துன்புறுத்துவோரை, கொலை செய்யும் நக்சல் இயக்கத்தில் சேர்ந்த கோனி, வர்கீஸ் என்ற இளைஞருடன் இணைந்து, 26 வயதில் ஆயுதமேந்தினார். பின், கட்சிக்காரர்கள் சொன்னதால், போலீசில் சரணடைந்து, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவித்தார். விடுதலையான போது, 'ஆயுதத்தினால், எதையும் சாதிக்க முடியாது...' என்பதை உணர்ந்து, மத போதகராக மாறி விட்டார்.— ஜோல்னாபையன்