பேயாக மாறிய நடிகை!
மேற்கத்திய நாடுகளில், விடுமுறை நாட்களின்போது, பயங்கரமான வேடமிட்டு, மற்றவர்களை பயப்பட வைக்கும் வகையிலான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சமீபத்தில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், இதுபோன்ற ஒரு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஹாலிவுட் நடிகை ஜெனீபர் லோபஸ் அழைக்கப்பட்டிருந்தார்.ஆனால், அவர், கறுப்பு நிற உடையணிந்து, முகம் மற்றும் உடல் முழுவதும் எலும்பு கூடு போல் வரைந்து, பேய் போல் வேடமிட்டு வந்திருந்ததை, விழா முடிந்த பின் தான், பார்வையாளர்கள் கண்டுபிடித்தனர். 'அழகான ஜெனீபர் லோபசை பார்க்கலாம் என வந்தால், இப்படி, பேய் வேடமிட்டு, பீதியை ஏற்படுத்தி விட்டாரே...' என, முணுமுணுத்தனர் பார்வையாளர்கள்.— ஜோல்னா பையன்.