உள்ளூர் செய்திகள்

கானாவில் ஹிந்து கோவில்கள்!

மேற்கு ஆப்ரிக்காவில் உள்ள ஒரு நாட்டின் தலைநகரம், அக்ரா. கடந்த, 1947ல், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, சிந்து மக்கள் இங்கு வந்து குடியேறினர். இன்று தலைநகரில் மட்டும், ஐந்து ஹிந்து கோவில்கள் உள்ளன.முதல் கோவில், ஸ்வாமி ஸ்னானந்தா சரஸ்வதியால், 1975ல் கட்டப்பட்டது.அக்ராவுக்கு வெளியில் உள்ள மெடி பகுதியில் உள்ள, ஸ்ரீராதா கோவிந்த் கோவில், மிகவும் பிரபலம். ஏ.சி.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபு பாதாவின் ஹரே கிருஷ்ணாஸ், 2010ல் கோவிலைக் கட்டினர். இன்று கானாவில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் உள்ளனர்.இறைச்சி சாப்பிடுவதை தவிர்க்கின்றனர், கானா ஹிந்துக்கள். பசுக்கள் புனிதமானவை, அதற்கு தீங்கு செய்யக் கூடாது என நம்புகின்றனர். பூமியில் மாட்டு இடையனாகத்தான் கிருஷ்ணர் பிறந்தார் என்பது தான், இதற்கு காரணம்.கானாவில் இன்று வேகமாக பரவி வருவது, ஹிந்து மதம் தான். சத்திய சாயி பக்தர்கள் மற்றும் பிரம்ம குமாரிகளும் உள்ளனர்.—ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !