உள்ளூர் செய்திகள்

அதிசயமே அசந்து போகும் அதிசயம்

சீனாவில் உள்ள, யாங்கிட்சே என்ற நதி பாயும் பகுதிகளில், ஏராளமான தீவுக் கிராமங்கள் உள்ளன. இவற்றில், ஹயட்டோயு வான் என்ற குக்கிராமமும் ஒன்று. போதிய அடிப்படை வசதிகள் மற்றும் தொலை தொடர்பு வசதிகள் இல்லாததால், இங்கு வசித்தவர்கள், கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி, வேறு பகுதிகளுக்கு சென்றதில், ஒட்டு மொத்த கிராமமே, 20 ஆண்டுகளுக்கு முன், காலியாகி விட்டது. இப்படி ஒரு கிராமம் இருந்ததே, சீனாவில் உள்ளவர்களுக்கு தெரியாமல் போய் விட்டது. இந்நிலையில், இக்கிராமத்தினர் சிலருக்கு தங்கள் சொந்த ஊர் ஞாபகம் வந்து, சமீபத்தில் அங்கு சென்றபோது, ஆச்சரியத்தில் உறைந்து விட்டனர்.அங்கிருந்த வீடுகள், சாலைகள், சுவர்கள் மீதெல்லாம், விதம் விதமான செடிகள் பூத்து குலுங்கி, அழகான கிராமமாக மாறியிருந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும், சுற்றுலா பயணிகள் அந்த கிராமத்தை நோக்கி, படையெடுக்க துவங்கியுள்ளனர்.— ஜோல்னாபையன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !