தீக்குச்சி உருவானது எப்படி?
சில கண்டுபிடிப்புகள் எதிர்பாராமல் தான் நடக்கின்றன. தீக்குச்சிகளும் அப்படி தான்.பிரிட்டிஷ் பார்மசிஸ்ட்டான, ஜான் வாக்கர், மருந்துகள் தயாரிக்கும் போது, மேஜை மீது ரசாயன பொருட்கள் விழுந்து கிடக்கும். அதை சிறிய மர குச்சியால், சுரண்டி அப்புறப்படுத்தும் போது அது, திடீரென தீ பற்றி எரிந்துள்ளது.இதை கண்டு, ஒரு குச்சியில், பொட்டாஷியம் குளோரைடு மற்றும் ஆண்டிமணி சல்பைட் கலவையை தடவி, பிறகு அதை, சான்ட் பேப்பரில் உரசி நெருப்பை வரவழைத்தார், ஜான். அப்படி தான் தீக்குச்சி உருவானது.— ஜோல்னாபையன்