உள்ளூர் செய்திகள்

ஒரு முறைக்கு மேல் போனால், அவ்ளோதான்!

சீனாவில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள், ஒழுங்காக வேலை செய்யாமல், 'ஓபி' அடிப்பதை தடுக்க, பல்வேறு கெடுபிடிகளை விதிக்கத் துவங்கியுள்ளன. குயாங்டாங் மகாணத்தில் உள்ள, 'அனுப் எலெக்ட்ரிக்ஸ்' என்ற நிறுவனம், தங்கள் ஊழியர்கள், அலுவலக நேரத்தில், ஒரு நாளைக்கு, ஒரு முறைக்கு மேல், கழிப்பறைக்கு சென்றால், 250 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என, கிடுக்கிப்பிடி உத்தரவு போட்டுள்ளது. 'கழிப்பறைக்கு போகிறேன் என கூறி, அங்கு சென்று, புகை பிடிப்பது, வெட்டியாக நேரத்தை போக்குவது என, 'ஓபி' அடிக்கின்றனர். இதை தடுக்கவே, இந்த அதிரடி ஆயுதத்தை கையில் எடுத்துள்ளோம்...' என்கின்றனர், அந்த நிறுவனத்தின் அதிகாரிகள்.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !