உள்ளூர் செய்திகள்

84 எல்லாம் ஒரு வயதா?

ஆசை இருந்தால், உடல் ஊனமோ, முதுமையோ லட்சியத்தை அடைய தடையாக இருக்காது. அமெரிக்காவை சேர்ந்த மிர்தா கேஜ் என்ற பெண், விமானியாக இருந்தார். பணியில் இருந்தபோது அவரை, 'பார்க்கின்சன்' என்ற நரம்பு தளர்ச்சி நோய் தாக்கியது. வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்.இப்போது, மிர்தாவின் வயது: 84. விமானங்கள் பறப்பதை கண்டு பெருமூச்சு விட்டவர், மறுபடியும் ஒருமுறையாவது விமானம் ஓட்ட முடியுமா என ஏங்கினார். தன் ஆசை பற்றி, மகன் ஏல் கேஜிடம் கூறினார். அம்மாவின் ஆசையை நிறைவேற்ற ஏற்பாடு செய்தார், மகன். வின்னி பிஸ் யுக்கி ஏரியின் மீது, விமானம் பல தடவை வட்டமிட்டு பறந்தது. தன், 84வது வயதில், ஆசை நிறைவேறிய மகிழ்ச்சியில் இருக்கிறார், இந்த சாதனை மூதாட்டி.— ஜோல்னாபையன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !