உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை! - புன்னகைகளை புதைக்காதீர்கள்!

பயன்படாத கோபத்தையும்பாழாய்ப் போன பொறாமையையும்பாக்கெட்டுக்குள் வைத்து அவ்வப்போதுபாம்பாய் படமெடுத்துக் கொள்கிறேன்!பக்கத்து வீட்டு சட்டிப்பூபூத்துக் குலுங்கினால்பூரித்திருக்கும் என் முகம்கொஞ்சம் பொசுங்கிக் கொள்கிறது!செல்லமாய் சேர்ந்து செல்லும்சொந்த பந்தங்களைக் கண்டால்சிரித்திருக்கும் என் முகம்சிறுக சிணுங்கிக் கொள்கிறது!பதக்கப் பரிசு பிடித்துபடியேறுபவனைக் கண்டால்பழம் சுவைத்த என் பற்கள்பல கற்களை கடித்துக் கொள்கிறது!புகழ் மாலை சூடிபுறப்பட்டவனைக் கண்டால்வாழ்த்த வந்த என் வார்த்தைகள்வசை மொழிகளை வாரி குவிக்கிறது!தொடர் வெற்றி துாக்கிதோள் தட்டுபவனைக் கண்டால்இதமாய் இருந்த என் இதயம்எரிமலையாய் கொதித்துக் கொள்கிறது!வேண்டாத பொருட்களைவிலை கொடுத்து வாங்கவீதி வீதியாய் அலையும் நாம்இலவசமாய் கிடைக்கும்இயற்கை சிரிப்பை இதயங்களோடுஏன் பகிர்ந்து கொள்ளக் கூடாது?வாருங்கள்பொன் நகைகளை புதைத்து வைப்போம்புன்னகைகளை விதைத்து வைப்போம்புண்ணான நெஞ்சங்களில்பொன்னான பூஞ்சிரிப்புகளைஎந்நாளும் ஏற்றி வைத்துதிருநாளாய் தினமும் சிரித்திருப்போம்!— க. நிலவழகன், எர்ணாகுளம், கொச்சி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !