கவிதைச்சோலை! - என்றென்றும் கண்ணதாசன்!
மதுக்கூட அவன் நாவில் மதுரமாகும்மங்காத அவன் பெயரும் மகுடம் சூடும்புதுமைக்கும், பழமைக்கும் பாலம் கட்டும்புத்துணர்வை நமக்களித்து மகிழ்வைக் கூட்டும்!பொதுவுடைமை எண்ணங்கள் பெரிதாய் தோன்றும்பொன்னான தத்துவங்கள் பொலிவை ஏற்கும்எதுகைக்கும் மோனைக்கும் ஏற்றம் தந்தார்இணையில்லா கண்ணதாசன் என்றும் வாழ்வார்!இதிகாசங்கள் அவன் கவியில் எளிமை ஏற்கும்எளியோரை சென்றடைந்து இனிமை சேர்க்கும்செதுக்கிட்ட சித்திரம் போல் சொற்கள் மின்னும்செந்தமிழும் அவன் திறனை சிறப்பாய் சொல்லும்முத்திரையாய் பல கவிதை முனைந்து நிற்கும்முணுமுணுத்தால் நாளெல்லாம் நெஞ்சை அள்ளும்எத்திக்கும் அவன் கவிதை ஒலிக்கும் ஓங்கிஈடில்லா கண்ணதாசன் என்றும் வாழ்வார்!எதற்கெனினும் ஏற்றதொரு பாடல் உண்டேஎல்லாருக்கும் ஒரு கவிதை ஏற்பதாகும்விதவிதமாய் விருத்தங்கள் வரிசைக் கட்டும்வார்த்தைகளும் சரளமாக வந்து கொட்டும்பதவிகளும் தேடி வந்து தாளைத் தாங்கிபாரெல்லாம் அவன் புகழைப் பரப்பும் ஓங்கிஉதாரணமாய் அவன் வாழ்வு உலகில் நிற்கும்ஒப்பற்ற கண்ணதாசன் என்றும் வாழ்வார்!- திருவரங்க வெங்கடேசன், பெங்களூரு.