கவிதைச்சோலை - வக்கிர எண்ணங்களை வதம் செய்வோம்!
* இரவை பகலாக்கும் இத்திருநாள்நம் அகம் இருள் நீக்கிசுகம் பல கொடுக்கும்தீப ஒளித் திருநாள்!* காவிரி போன்ற புனித நதிகள்மாசு படுவதைத் தடுக்கஇந்நாளில் உறுதிமொழி எடுத்துஅதிகாலை எழுந்துகங்கா ஸ்நானம் செய்திடுவோம்!* கைபேசி சிறையிலிருந்துஒருநாள் விடுதலை வாங்கிசங்கு சக்கரம் சுழல்வது போல்நண்பர்கள், உற்றார்களுடன் வலம் வந்துபேசிக் குலாவி மகிழ்ந்திடுவோம்!* ஆதரவற்றோர், அனாதை குழந்தைகளைநாடிச்சென்றுபுத்தாடைகள், இனிப்புகள் வழங்கிவண்ண வண்ண புஸ்வானமாய்உள்ளத்தில் ஏற்படும் மகிழ்ச்சிபூப்பூவாய் பூத்துக் குலுங்கட்டும்!* வெற்றிகள் வலம் வந்துசாதனைகள் பல படைக்கமேல் எழும்பும் ராக்கெட்டாய்நமது இலக்குகளும் மேலே மேலேஉயர்ந்து செல்லட்டும்!* நரகாசுரன் வதம் செய்யப்பட்ட இந்நாளில்மனதில் அவ்வப்போது தோன்றும்பொறாமை, சூழ்ச்சி, வஞ்சனைவக்கிர எண்ணங்களைவதம் செய்ய உறுதி எடுப்போம்!* மனதின் எதிர்மறை எண்ணங்கள்சரவெடி போல் வெடித்துச் சிதறநேர்மறை எண்ணங்கள்தீபங்களின் வரிசை போல்அணிவகுத்து வரச் செய்வோம்!* பண்பாடு பழக்க வழக்கம் மாறாமல்பாரம்பரியப் பெருமை சிதையாமல்பட்டொளி வீசும் இத்திருநாளைபகட்டின்றி நோக்கிடுவோம்பரவசமாய் கொண்டாடிடுவோம்!பூவைசுபாவாணன், கோவை.