உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை - காலத்தால் களையப்படும் துன்பங்கள்!

நிலைத்த சாதனைகள் என்றுஇங்கு எதுவுமில்லை...ஒருவரின் எல்லா சாதனைகளுமேபின் வருபவரால் முறியடிக்கப்படும்சாத்தியம் உள்ளவை தான்!ஈடில்லா பிரமாண்டம் என்றுஇங்கு ஒன்றுமில்லை...வியப்பான எல்லா பிரமாண்டமுமேமற்றொன்றால் தாழ்வாக்கப்படும்வாய்ப்பு உள்ளவை தான்!நிரந்தர வெற்றிகள் என்றுஇங்கு எதுவுமில்லை...இன்றைய எல்லா வெற்றிகளுமேநாளைய நபரால் பறிக்கப்படும்உறுதிப்பாடு உள்ளவை தான்!அழிவில்லா அதிகாரம் என்றுஇங்கு ஒன்றுமில்லை...இப்போதைய எல்லா அதிகாரமுமேஇன்னொருவரால் விரட்டப்படும்சூழ்நிலை உள்ளவை தான்!நிலைத்த திறமை என்றுஇங்கு எதுவுமில்லை...ஒருவரின் எல்லா திறமையுமேபுதியவரால் முறியடிக்கப்படும்சாத்தியம் உள்ளவை தான்!எல்லையில்லா ஆஸ்தி என்றுஇங்கு ஒன்றுமில்லை...பிரமிப்பான எல்லா ஆஸ்தியுமேமற்றொருவரால் கைப்பற்றப்படும்வாய்ப்பு உள்ளவை தான்!விலகாத உறவுகள் என்றுஇங்கு எதுவுமில்லை...ஒருவரின் எல்லா உறவுகளுமேமரணத்தால் பிரிக்கப்படும்உறுதிப்பாடு உள்ளவை தான்!அகலாத துன்பங்கள் என்றுஇங்கு ஒன்றுமில்லை...வருத்தும் எல்லா துன்பங்களுமேகாலத்தால் களையப்படும்சூழ்நிலை உள்ளவை தான்!— சி. அருள்மொழி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !