சமையலறை குறிப்புகள்...
* அடை, கரகரப்புடன் வரவேண்டுமென்றால், பாசி பருப்பை அதிகமாக சேர்க்கலாம்* சப்பாத்திக்கு மாவு பிசையும்போது, கோதுமை மாவுடன், சிறிது ராகி அல்லது சோயா மாவை சேர்த்து பிசைந்தால், ருசியாகவும், சத்து மிகுந்ததாகவும் இருக்கும்* ஆப்பத்துக்கு அரைத்த மாவு மிஞ்சினால், அதில் சிறிது கடலை மாவு, உப்பு, காரம், பொடியாக நறுக்கிய வெங்காயம், பெருங்காயம், சோடா உப்பு சேர்த்து பிசைந்து, சூடான எண்ணெயில் பொரித்து எடுத்தால், சுவையான பக்கோடா தயார்.