இதப்படிங்க முதல்ல..
அஜித் படத்துக்கு பாலிவுட்டில் போட்டி!தமிழில் ஹிட்டான, கஜினி மற்றும் சாமி உட்பட பல படங்கள், இந்தியிலும் ரீ - மேக்காகி, வெற்றி பெற்றதால், சமீபகாலமாய், தமிழில் வெளியாகும் படங்களை, இந்தி ஹீரோக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அந்த வகையில், அஜித் நடித்து, வெளியான, ஆரம்பம் படத்தை பார்த்து, அக் ஷய் குமார், ஹிருத்திக் ரோஷன் ஆகியோர் நடிக்க, விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அவர்கள் இரண்டு பேருமே, அஜித் நடித்துள்ள வேடத்துக்கே போட்டி போடுவதால், யாரை வைத்து படமாக்கலாம் என்பது, இழுபறியில் உள்ளது.— சினிமா பொன்னையா.சிம்ரன், ஜோதிகாவை உள்ளடக்கிய ஹன்சிகா!சந்திரமுகி படத்தில், ஜோதிகா நடித்தது போன்ற கேரக்டரில், அரண்மனை படத்தில், ஹன்சிகா நடித்து வருகிறார். இதுவரை, தான் நடித்ததிலேயே இது தான், 'வெயிட்டான' வேடம் என்பதால், 'இந்த படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கும் போது, மற்ற படங்களில் நடிக்க மாட்டேன்...' என்று, மொத்த கால்ஷீட்டையும் கொடுத்து நடித்துவரும் ஹன்சிகா, சில காட்சியில், நடிப்பு பிரளயமாய் வெடித்து, சிதறுகிறார். அதைப் பார்த்த டைரக்டர் சுந்தர்.சி, 'ஹன்சிகாவை குஷ்பூ மாதிரி சின்சியரான நடிகை என்று மட்டும்தான் நினைத்தேன். ஆனால், சிம்ரன், ஜோதிகா, என, பல பர்பாமென்ஸ் நடிகைகளையும், உள்ளடக்கிய மெகா நடிகையாக இப்போது பார்க்கிறேன்...' என்று, தன் வியப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆகாச வல்லிடி அதிர இடித்தது!— எலீசா.அம்மாவாக நடிக்க ஆசைப்படும் விஜி!தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்து, சிறந்த அம்மா நடிகைக்கான, தேசிய விருதினை பெற்ற சரண்யாவுக்கு, அதன்பின் பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. அதனால், அவர் இடத்தை பிடிக்க, சில மாஜி ஹீரோயின்கள் முயற்சி எடுப்பதை தொடர்ந்து, ஆரோகணம் படத்தில், நாயகியாக நடித்த சரிதாவின் தங்கை விஜியும், அம்மா வேடங்களுக்காக முழு வீச்சில் இறங்கியுள்ளார். இந்நிலையில், மதயானைக் கூட்டம் படத்தில், அம்மா வேடத்தில் நடித்துள்ளதால், இப்படம் தனக்கு புதிய வாய்ப்புகளைப் பெற்று தரும் என்றும் எதிர்பார்க்கிறார் விஜி சந்திரசேகர். கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்!- எலீசாபிகினி நடிகையாகும் த்ரிஷா!என்றென்றும் புன்னகை மற்றும் பூலோகம் படங்களில் நடித்து வரும் த்ரிஷா, அடுத்த ஆண்டு, திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வந்த போதும், புதிய படங்களுக்கான வேட்டையை, அவர் நிறுத்தவில்லை. அதோடு, இதுவரை, உடம்பை முழுசாக கவர் செய்யும் ஆடைகளை அணிந்து, சினிமா நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்த த்ரிஷா, இப்போது, படு கவர்ச்சியாக உடையணிந்து வந்து, வந்திருப்போரின் கவனத்தை, தன் பக்கம் இழுக்கிறார். அப்போது, தன்னிடம் பேசும் இயக்குனர்களிடம், முன்னணி ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால், பிகினி நடிகையாக மாறவும், உத்தரவாதம் கொடுக்கிறார்.கதை முடிந்தது; கத்திரிக்காய் காய்த்தது!— எலீசாசந்தானத்துக்கு ஷாக் கொடுத்த சூரி!சந்தானத்தின் கால்ஷீட் கிடைக்காமல், அலைந்து கொண்டிருக்கும் சில மெகா பட நிறுவனங்களை, லாவகமாக தன் பக்கம் இழுத்து வருகிறார், 'பரோட்டா' சூரி. அதோடு, அப்படங்களின் ஹீரோக்களுடனும் நட்பு வளர்த்து, அவர்களுடன் தொடர்ந்து நடிப்பதற்கான முயற்சியிலும், ஈடுபடுகிறார். இதில், சந்தானத்துடன் தொடர்ந்து நடித்த, சில இளவட்ட ஹீரோக்கள், சூரி பக்கம் சாய்ந்து விட்டனர். இதனால், பலத்த அதிர்ச்சியடைந்த சந்தானம், எஞ்சியுள்ள தன் அபிமான ஹீரோக்களையாவது, தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று, வெட்டி பந்தாவுக்காக, கால்ஷீட்டுக்காக படாதிபதிகளை அலைய விடுவதை, தவிர்த்து வருகிறார். மேலும், சூரி பக்கம் சாய்ந்த ஹீரோக்களை, மீண்டும், தன் பக்கம் இழுக்கும் முயற்சியிலும், தீவிரமாக இறங்கியுள்ளார்.— சி.பொ.,ஆர்யாவுடன் நடிக்க மறுத்த ஸ்ருதி ஹாசன்!ஸ்ருதி ஹாசனுடன், 'டூயட்' பாட வேண்டும் என்ற ஆசை, நீண்ட நாட்களாக ஆர்யாவுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது. அதனால், அதற்கான தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆர்யா, தடையறத் தாக்க பட இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், தான் நடிக்கும், மீகாமன் என்ற படத்தில், ஸ்ருதி ஹாசனை நாயகியாக்க கேட்டுக் கொண்டார். ஆனால், ஆர்யா, ஹீரோ என்றதும், அப்படத்தில் நடிக்க, மறுத்து விட்டார் ஸ்ருதி ஹாசன். இதையடுத்து, 'சூர்யா மற்றும் தனுஷூடன் நடித்த ஸ்ருதி, என்னுடன் நடிக்க மறுக்கிறார் என்றால், இன்னும், நான் அந்த அளவுக்கு வளரவில்லையா...'என்று, தன்னைத் தானே கேட்டுக் கொண்டிருக்கிறார் ஆர்யா.— சினிமா பொன்னையாஅவ்ளோதான்!