ரோந்து போகும் நாய்!
படத்தில் காணப்படும், இந்த தெரு நாயின் பெயர், குஞ்சப்பன். கேரளாவில், பாம்பாடி என்ற ஊரில், இலக்கொடிஞ்சி சந்திப்பில், ஒரு கடையின் திண்ணை தான் இதன் இருப்பிடம். அப்பகுதியில் குடியிருப்போர்களை நன்றாக அடையாளம் தெரிந்து வைத்துள்ளது, இந்த நாய். இரவில், அந்த ஏரியா, 'குடிமகன்'கள் யாராவது தள்ளாடியபடி, வீடு திரும்பினால், உடனே, அவர்களுக்கு, 'பாடிகார்டு' ஆகி விடுகிறது, இந்த மூன்றரை வயது குஞ்சப்பன். 'குடிமகன்' வீட்டுக்குள் சென்ற பின், 'ஓ.கே., நான் போறேன்...' என்று கூறுவது போல், கடை திண்ணைக்கு திரும்புகிறது.— ஜோல்னாபையன்.