கவிதைச்சோலை - சுபகிருது சோபகிருது!
உண்மை ஒய்யாரமாய்பொய் செருக்கு ஒழித்துமங்களம்நீண்டதொருநிகழ்ச்சி நிரலாக்கவரும்சோப கிருது வருக!ஒளி அழகில்ஒளிந்திருக்கும் கர்வம்ஒரு மனதாய் அகன்றுமனிதர் யாவரும்ஆசீர்வதித்துக்கொள்ளவரும்சோப கிருது வருக!நிலம்நீர்காற்றை பதுக்காமல்பொதுவாய்ஒருங்கிணைத்துஒய்யாரமாய்மனிதகுலத்தை மாற்றும்மங்களமாங்கல்யமாகவரும்சோப கிருது ஆண்டு!ஒளி மாயமில்லாதஒளிமயமான எதிர்காலத்தைஅழகு ஓவியமாகஅச்சாணியால் திருத்திஆணவக்குறியீடுஅடையாளம் கண்டுஅடிக்கோடிட்டசிவப்பு மையால்சிதறடித்துசகிப்புத் தன்மையைவீட்டிற்கு ஒரு மரமாய்உரம் போட்டுவளர்த்திட வரும்சோப கிருது புத்தாண்டைவரவேற்போம்!சு. பிரபாகர், வில்லாபுரம், மதுரை.