உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

தை மகள் வருகிறாள் தரணி மணக்க!* தைமகள் வருகிறாள்தரணி மணக்க...வாசல் தெளித்துவழியெங்கும் கோலமிட்டுபூக்களால் அலங்கரித்துபுதுமகளை வரவேற்போம்!* புதுப்பானை வாங்கிபொன் மஞ்சள் மாலைகட்டிஓலை நறுக்குகளால்உலைப் பொங்கல் பொங்கட்டும்!எங்கும் மகிழ்ச்சி வெள்ளம்ஏகாந்தம் கொடுக்கபச்சரிசி மணக்கபடைப்போம் பொங்கலினை!* பால் பொங்கும் பரவசத்தில்பூமி மகிழட்டும்...செங்கரும்பு காய்கறிகள் செவ்வாழை கனிகளுடன்தலைவாழை இலை வைத்துதை மகளை வரவேற்போம்!* பொங்குக பொங்கல்...பொங்கலோ பொங்கல்...எனும் வாழ்த்தொலிஎத்திசையும் ஒலிக்கட்டும்!* உழவர் சிறக்கவும்ஊர் மக்கள் மகிழவும்தரணி மகிழ்விக்கதை மகள் வருகிறாள்...அத்தைமகளின் வரவுஅத்'தை' மகளின் வரவுபோல்ஆனந்தத்தைஅள்ளி இறைக்கட்டும்!* கரும்பின் சுவையும்பொங்கலின் குழைவும்மஞ்சள் மணமும்மனித குலம் பெறட்டும்!* ஏலம் முந்திரிதிராட்சை வெல்லம்இவையெல்லாம் சேர்ந்துஇனிப்பை கூட்டல் போல்மனிதர்கள் சேர்ந்துமனிதத்தின் புகழ்கூட்டதை மகள் வருகிறாள்தரணி மணக்க...வரும் தை மகளை வணங்கிதாய்போல் வரவேற்போம்!— வளர்கவி, கோவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !