உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை

கொடுக்க ஆயத்தமாவோம்!* கேட்டும் கிடைக்காமல்சலித்துக் களைத்தஎல்லாரும்புரிந்து கொள்ள வேண்டியதுஅவசியமாகிறது...கேட்பதை விடகொடுப்பது எளிதாகவும்ஏதுவாகவும் இருப்பதை!* தரம் மிகுந்த எதுவும்தானாய் வரவேற்கப்படும்என்ற உண்மைஅறிவுறுத்திக் கொண்டேயிருக்கிறது...தரமானதைக் கொடுக்கஆயத்தமாய்இருக்கச் சொல்லி!* கொடுக்கத் தெரிந்தவர்ஒருபோதும்செய்யத் தேவையில்லை...பறித்து எடுக்கும்பாதகத்தை!* கொடுப்பவரேபெறமுடியும் என்ற விதிஅன்பைப் போலவேஅனைத்திற்கும் உண்டு!* வாடிய செடி கூடநாம் கேட்காமலேயேபூரிப்போடுபூவைத் தந்து விடும்அதன் வேருக்குநீரைக் கொடுத்து விட்டால்!* உழைப்பைக் கொடுக்கநாம் முனைப்பாய்இருந்தால்...வற்புறுத்தலின்றிவந்து சேர்ந்து விடுகிறதுஉரிமையும், ஊதியமும்!* சோர்ந்து வருபவருக்குஆறுதலாய்க் கொடுக்க எல்லாரது கைவசமும் இருக்கிறதுஒரு புன்னகையேனும்!* எடுக்க எடுக்கநிரம்பி வழியும்அட்சயப் பாத்திரங்கள்அகிலத்தில் அனேகம்விரவிக் கிடக்கின்றனஇக்கலியுகத்தில் கூட...* ஆனாலும்...அறிந்து கொள்வோம்அவற்றைக் கண்டறியும் கொடுப்பினையாளர்கள்கொடுக்கத் தெரிந்தகொடையாளிகள்மட்டும் தான் என்று!— கீர்த்தி, கொளத்தூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !