கவிதைச்சோலை!
வலி* பெண் விடுதலை பேசும்புண்ணியவான்களே...எங்களுக்குஅடிமைச் சங்கிலி பூட்டியவிடுதலை வேண்டாம்!* பின் தூங்கிமுன் எழுந்துகடமைகளை செய்தாலும்கிடைப்பதென்னவோ,'மூதேவி' பட்டம் தான்!* சரிநிகர் சமானமாகசம்பாதித்தாலும்எஞ்சியதென்னவோ,'சனியன்' மட்டும் தான்!* தோள் கொடுத்தால்சுமை குறையும்என நினைத்தோம்...அந்தோ பரிதாபம்சுமை தாங்கும் கல்லாகவேமாறி விட்டோம்!* பிடித்த, 'சேனல்''பிடி' சோறுஎல்லாமே...இன்றைக்கும்எங்களுக்கு கானல் நீரே!* போதும்...உங்கள் பரிந்துரைகள்!* மீண்டும் நாங்கள்,அடுப்பூதிக் கொண்டேஅறியாமை இருளில்மூழ்கி விடுகிறோம்!* அப்போதாவதுசுமை தாங்கும்எங்கள் தோள்களின்வலி(மை)யைஆண் வர்க்கம் உணரட்டுமே!— ஆர்.மீனா, மதுரை.