உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாழ்க்கை அர்த்தப்படும்! தனிமரம் தோப்பாவதில்லை...ஒரு கை தட்டிஓசை எழுவதில்லை!சொர்க்கம் விண்ணிலில்லை - அதுஉறவுகளோடு மனிதன் மண்ணில்கூடி வாழ்கிற வாழ்வே!நரகம் வேறில்லை - அதுஉறவுகளைத் தொலைத்தமனித வாழ்வே!உலகையே மனிதன்உரிதாக்கிக் கொண்டாலும்உறவுகள் இல்லையேல்பயனேதும் இல்லை!உறவு மலர்கள் பூத்தாடும் வாழ்க்கை மணம் வீசும் இன்ப மலர்ச்சோலை!உறவற்ற வாழ்க்கைதனிமை, வெறுமை எனும் துன்ப முள்ளாடும் கொடும்பாலை!உறவுகளை ஒதுக்கிவாழ்வதென்ன வாழ்வா...அவ்விதம் வாழ்வதும் ஒருவாழ்வா...உலகம் என்பதுஉறவுகளுக்குள் அடக்கம்!உறவுகளால் தான்உலகமது நிலைக்கும்!உண்மை அன்பிலேஉறவுகள் மெய்ப்படும்உறவுகளால்தான் மனிதவாழ்க்கை அர்த்தப்படும்!உறவுகளை நேசிப்போம்உறவுகளால் நாம்வாழ்வுதனை வாசிப்போம்!உறவு மெய்ப்படட்டும்உலகு மேம்படட்டும்!— நெப்போலியன், மண்ணூர் பேட்டை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !