உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மாயத்தடி....!* மாயத்தடியொன்று வேண்டும்...மானிடப் போர்வையில்மாபாவம் புரிந்திடும் மதியிழந்தோரின்மண்டையைப் பிளக்க!* சாதிக்க வழியற்றஆதிக்க வெறிபிடித்தஜாதியே வேதமெனும்சாத்தான்களைசாத்து சாத்தென்று சாத்த!* பெண்ணைக் கரம் பிடிக்கபொன், பொருள் மீது பற்று வைத்துபேரம் பேசும் பசங்களைநாலு போடு போட!* உழைத்துப் பிழைப்பதில்உடன்பாடற்றுஏய்த்துப் பிழைத்திடஇறைவனின் பெயரைபயன்படுத்தும் கயவர்களின்கடைவாயில் இடிக்க!* பாலூட்டி வளர்த்தவளைபட்டினி போட்டுஅபிமான நடிகனின்உருவ பொம்மைக்குபாலாபிஷேகம் செய்யும்ரசிகனின் நகக்கண்களை நசுக்க!* தீர்வு காண இயலாதஏராளமான பிரச்னைகளைநேருக்கு நேராய் தடி கொண்டுதகர்க்க முடியாதென்பதால்வீழ்ந்து வரும் என் தேசத்தின் தோள்களைஇயன்றளவேனும் தாங்கிப் பிடிக்கமாயத்தடியொன்று வேண்டும்!— கா.இளையராஜா, விருத்தாசலம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !