உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மறக்க முடியாத அந்த நாளை!அந்த நாள்...ஒரு முறைதான் வரும் நாள்அதை மறக்க முடிகிறதாஇன்று வரை!படபடப்பைக் கூட்டிபசிமயக்கம் ஓட்டிபயணத்தில் வேகம் சேர்த்துதூக்கத்தை மறக்க வைத்ததுடிப்பான நாள், அந்த நாள்!கண்ணிலே கனிவும்காரியத்தில் குழைவும்நெஞ்சில் எதிர்பார்ப்பும்நெருங்க நெருங்க சுகமும்நிறைத்த நாள், அந்த நாள்!ஆழ்மனத் தேவைகளும்அடிமனத்து ஆசைகளும்மெல்ல மெல்ல மேல்வந்துமிடறு சுட்ட நாள், அந்த நாள்!கைப்பையைக் கணக்கின்றிதிறந்து திறந்து மூடியதில்கைவலித்துப் போன போதும்கனத்த மனவலிக்கு முன்கைவலி லேசாக...கருதிய நாள், அந்த நாள்!காகிதத்தில் மடித்து வைத்தகையளவு பவுடர்கன்னத்தில் போட்டு,கண்ணாடி பார்த்து ரசித்த நாள், அந்த நாள்!சொந்த கனவுகளையேசுமக்க முடியாத வேதனையில்சொந்தங்களின் எதிர்பார்ப்பையும்சேர்த்தே சுமந்த நாள், அந்த நாள்!முழம்பூவும், இனிப்பும்தவிப்பை மறைத்தபடிதப்பாமல் வீடு சேர்க்கும்தங்கமான நாள், அந்த நாள்!அந்த நாளின் ஆனந்தம்விடிவதற்குள் விலகிவிடமீண்டும் சோகத்தைமீட்டெடுக்கும் நம்வாழ்க்கை!ஒற்றைநாள் மட்டும்தவணையில் மகிழ்ச்சி தந்துதலைமறையும் அந்த நாள் எந்த நாள்!அந்த நாள் நம் அனைவருக்கும்அறிமுகமான நாள்தான்!சராசரி குடும்பங்களில்சந்தோஷம் நிறைகிறசம்பள நாள் என்னும் முதல் தேதி...அந்த நாளை மறக்க முடியுமா?— சிவ.சூர்யா, கல்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !