உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

ஒளியைத் தேடி!கருவறையின் இருளிலிருந்து நான் வெளியே வந்ததுஉலகின் வெளிச்சத்தைக் காண...ஆனால்பெண் சிசு என்றதும்பெற்றோர், உற்றோர்முகமெல்லாம் இருண்டதேன்...என் கண்கள் மட்டும்கறுப்பில்லை உடலின்நிறமும் கூடக்கொஞ்சம் இருட்டு தான்!வளர்ந்து ஆளாகிபெண்மை கண் விழித்த போதுபெற்றோர் முகம்ஒப்புக்குத் தான் மலர்ந்ததோ...அன்பிலார்க்கு இவ்வுலகம்இல்லை என்றார்வள்ளுவர்!அழகில்லாதவர்க்குஎதுவுமில்லைநல்லூழ் எனும்ஒளி தொடாவிடில்!பெண், தெய்வமாம்ஆனால், காலில்போட்டுத் தேய்ப்பதும்மிதிப்பதும் ஏன்...சொற்களின் விரயம்பகட்டுக்காகசெயல்களின் திறம்மன இருளை மறைக்க!கண் கூசும் பொய்களின்வெளிச்சத்தை விடகருவறை இருளேமேலானதோ!— தேவவிரதன், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !