கவிதைச்சோலை!
பரீட்சை வந்தாச்சு!பரீட்சை வந்தாச்சுபயம் வேண்டாம்அதுவும் ஒரு பண்டிகை என்றேமகிழ்வோடு கொண்டாடதயாராவாய்!பாஸ் மார்க் வாங்கிட மட்டும்தேர்வுகள் வருவதில்லைஉன்னை நீயேபரீட்சித்துக் கொள்ளும் நேரம் அது!சிந்தனை சிதறா கவனம்உன் கவசமாக இருக்கட்டும்படிப்பை மட்டுமல்ல - கல்விபடிப்பினையை சொல்லவல்லது!வெற்றிப்படிகளைத் தாண்டும் போதுசிலசமயம்தடுக்கியும் விழுவதுண்டுஅதுவே தோல்வி என்றுதுவண்டு, புதைந்து விடாதே!பதற்றம், படபடப்பு, பயம்உன்னை வினா குறியாக்கும்...வேண்டா விருந்தாளிகள்உன் வீட்டு வாசலிலேயேஅவைகளுக்குவிடை கொடுத்து விடு!வினாக்கள் புரியும் முன்உன்னை புரிந்து கொண்டால்எழுதுகோலும்உனக்கு செங்கோலாகும்தேர்வு சாம்ராஜ்ஜியத்தின்சக்ரவர்த்தி ஆவாய் நீ!— ஜனபிரவாகன்,சென்னை.