கவிதைச்சோலை!
ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!தேவைகளுக்கும், திருப்திகளுக்கும்மனம் விட்டு பேசும்மந்திரம் இருக்கும் போதுதிரைமறைவில் புரையோடும்தீவிரவாதம் எதற்கு!விருட்சத்தின் விளைச்சலில்விருந்து உண்டுவேர்களுக்கு விஷம் விதைக்கும்விந்தை இதயம் படைத்தவினோத மனிதர்களே...புறமிருந்து சிரம் சாய்க்கபேடியின் அஸ்திரங்களை பிரயோகிக்கும்பிள்ளைப்பூச்சிகளா நீங்கள்!வாழ்க்கையெனும் நந்தவனம் வழங்கும்வசந்தத்தின் சுகந்தத்தைசுவாசிக்காதவரா நீங்கள்!நட்பெனும் நவரசம் நல்கும்அறுசுவையின் அடித்தளம் அறியாமல்வழித்தடம் தவறியவர்களா நீங்கள்!அப்படியானால்வாருங்கள் கற்றுத் தருகிறோம்!முறம் பிடித்து புலி துரத்திய எம்வீரமங்கையிடம் வினவிப் பாருங்கள்...மரணமே எனினும் மார்பில் தாங்கும்மரபை கற்றுத் தருவாள்!சிறகடித்துச் செல்லும்எம் சிட்டுக்குருவிகளைகேட்டுப் பாருங்கள்...சிதறியே கிடந்தாலும்கூடி கொத்தி தின்னும்கொள்கையை கற்றுத்தரும்!முற்றத்தில் முளைத்து நிற்கும்எம் முல்லைப் பூக்களைகேட்டுப்பாருங்கள்...மற்றவர் வாழ்க்கையில் வாசம் வீசும்வழியை கற்றுத்தரும்!எறும்புக்கும் இரை போடும்என் இளவல் இதயங்களில்இரும்புத் துண்டை எறியும்இறுகிய மனம் படைத்தஎந்திர மனிதர்களே...ஆயிரமாயிரம் அணு குண்டுகளையும்அள்ளித் தெளித்துப் பாருங்கள்அத்தனையும் அடி பணியும்அகிம்சையெனும் எங்கள்ஒற்றை ஆயுதத்தின் முன்!ஆகவே உங்கள்முள்வேலி முகாமைமுடக்கிவிட்டுநல்வழிப் பூங்காவில்நடைபயில முயலுங்கள்...நாளைய நம் தலைமுறைகள்நட்புறவுடன் வாழஒற்றுமை தேசம் உருவாகட்டும்!— க.திருவழகர், கொச்சி.