உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

மரண ஜாதகம்!* சிந்தும் மழைத்துளிக்கு தெரிவதில்லைவிழப் போவது ஆற்றிலாஇல்லை சேற்றிலா என்று...விழுந்த பின்பேஅதன் விதி தெரிகிறது!* ஆற்றில் விழும் துளியோநீராய் பெருக்கெடுத்துஅனைவரின் தேவையை தீர்க்கிறது!* சேற்றில் விழும் துளியோசிதைந்து சாக்கடையாய் நாறிசிறிதும் பயனற்று போகிறது!* பூக்கும் மலர்களுக்கு தெரிவதில்லைசேரப் போவது மணமாலையிலாஇல்லை மரண மாலையிலா என்று...விற்பனை ஆகும்போது தான்அதன் விதி தெரிகிறது!* மணமாலையில் சேரும் மலரோஎல்லாராலும் ஆசிர்வதிக்கப்பட்டுமங்கல பொருளாய் மாறுகிறது!மரண மாலையில் சேரும் மலரோகால்களில் மிதிபட்டுமக்கி நாராய் போகிறது!* பிறக்கும் பிள்ளைக்கு தெரிவதில்லைபிற்காலத்தில் தான் தேர்ந்தெடுக்கும் பாதைபிறர் மதிக்கும் பாதையா இல்லைமிதிக்கும் பாதையா என்று...வளர்ந்த பின்பேஅதன் வாழ்வின் விதி தெரிகிறது!* மதிக்கும் பாதையில்செல்லும் குழந்தையோமகத்தான சாதனைகள் புரிந்துமாபெரும் புகழை அடைந்துமரணித்தும் மரணிக்காமல் வாழ்கிறது!* மிதிக்கும் பாதையில்செல்லும் குழந்தையோமீளா தீமை சுழலில் சிக்கிமிகுந்த வேதனைக்கு ஆளாகிமெழுகில் விழுந்த புழுவாய் துடிக்கிறது!* பிறப்பினிலே கணிக்கப்படுவதில்லைமனித விதியின் ஜாதகங்கள்இறப்பினிலே கணிக்கப்படுகிறதுஅவனவன் வாழ்ந்த வாழ்க்கை!— க.ஆ.தரணிசந்தர், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !