கவிதைச்சோலை!
காலம் எப்போது வரும்!வாழ்க்கைப் பயணத்தின்வழித்துணை போல்வந்து சேர்ந்து கொண்டதுஅது!விரும்பித் தேடியது இல்லைவிலகக் கூடியதும் இல்லைஅது!என்னை எனக்கேஉணர்த்தியதும்என்னை நானே வெறுக்க காரணமும்அதுதான்!வெட்டி விட நினைத்தாலும்எட்டி அதை உதைத்தாலும்விட்டு விலகாது உடன் வருகிறது!என்னை அது விட்டுவிட்டாலும்அதற்கு பலருண்டுஅதை நான் விட்டுவிட்டால்எனக்கோ எதுவுமில்லைஎனச் செய்து விட்டது!அதுஅதுவாக வந்ததோஅல்லதுஎதுவாக வந்ததோ...ஆனால்மெதுவாகத்தான் வந்தது!முதலிலேயேதடை செய்யாதது தப்பு தான்இப்போதோதப்பையெல்லாம் அதுதடை செய்வதில்லை!இமைக்க மறந்திருக்கலாம்உறக்கத்தில்சுவாசிக்க மறந்திருக்கலாம்தும்மல் வருகையில்இரண்டை மறந்திருந்தாலும்அதை மறக்க இயலவில்லை!அது தவறானதல்லஇயல்பானது தான் என்கின்றனர்அதுவோதவறியும்இயல்பாய் இருக்க விடுவதில்லை!விசாரித்ததில்அதுமிக மோசமானது என தெரிகிறதுஆனால்எல்லாருக்கும் அதுதெரிந்ததாய் இருக்கிறதே... எப்படி?கர்ம வினையைக்கூடகளைந்து விடலாம்கர்மம்...இந்தக் காதலைக் களையகைகூடும் நாள் எப்போது வரும்!- கைலாஷ், தென்காசி.