உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வலிகள் வேண்டும்!வலிகள் தான்நிவாரணிகளின் ஊற்றுவலிகளேதேடல்களின் வித்து!பிரசவத்தின் வலிபரவசத்தின் வரவுகல்வியின் வலிவெற்றியின் செலவு!முயற்சியின் வலிஎழுச்சியின் ஒளிபயிற்சியின் வலிவளர்ச்சியின் படி!தேடலின் வலிபுதுமையின் உள்ளீடுபடிப்பின் வலிபடைப்புகளின் வெளிப்பாடு!ஆய்வின் வலிஅரியன தோன்றல்உளியின் வலிகல்லில் சிற்பம்!சிந்தனையின் வலிசாதனையின் பிறப்புஅறிவின் வலிஆளுமையின் சிறப்பு!கற்றலின் வலிஆற்றலின் வரவினம்அனுபவங்களின் வலிஞானத்தின் உயிர்ப்பு!சோம்பலின் வலிசுகத்தின் கேடுஉழைப்பின் வலிஉயர்வுக்கு வழி!இளமையில் வலிமுதுமையில் சுகம்முதுமையில் வலிமுடிவின் துவக்கம்!வலியின்றிவலிமையில்லைவலிகள் இல்லாமல்வலி நிவாரணிகள் இல்லை!வலிகள் வேண்டும்...வலிகளேநம்மை உச்சத்திற்குகொண்டு செல்லும்ஊர்தி!— எஸ். முருகேச பாண்டியன், ஆனையூர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !