கவிதைச்சோலை!
யாரோ ஒருவனுக்கான நேசம்!இடைவெளி விட்டுதொடுத்த பூக்கள்அழகாகத் தான் இருக்கின்றன!விட்டு விட்டுதனித்து வரும் அலையில்எந்தக் குறையுமில்லை!சிறகு விரித்து மிதக்கும்ஒற்றை பறவைஉணர்த்துகிறதுவாழ்வின் ரகசியத்தை!ஊருக்கு வழிகாட்டிவிலகி நிற்கும்மைல் கற்களில்புதைந்து கிடக்கிறதுயாரோ ஒருவருக்கான நேசம்!தனித்து ஒளிரும்நிலவை விடவும்வேறெதுவும் தோன்றவில்லைஉலகில் அழகாய்!இடைவெளிகள்தீர்மானிப்பதில்லைஒருபோதும்நம் நெருக்கத்தை!- இ.எஸ்.லலிதாமதி,சென்னை.