உள்ளூர் செய்திகள்

கவிதைச்சோலை!

வாருங்கள் பறவையாகலாம்!* இலையுதிர் காலமரங்கள் எனபயணங்களை உதிர்த்து நிற்கும்மனிதர்களாகி விட்டோம்!* கோவில் திருவிழாவென்றுகூடிக்குலவ போய் வந்தகொண்டாட்டப் பயணங்கள்காணவில்லை இன்று!* கோடை விடுமுறையென்றுதேடிப்போய் உறவை வளர்த்ததித்திக்கும் பயணங்களோஇன்று தென்படவில்லை!* விருந்து விசேஷமென்றுஅன்போடு அழைப்பு விடுக்கும்மகிழ்வான பயணங்களோஅருகிவிட்டன!* கனவு வந்ததென்றுகாண நாடிச் சென்றகலங்க வைக்கும் பயணங்களும்மறைந்து விட்டன!* எங்கேயும் எப்போதும்இறகுகளை உதிர்ப்பதை போலபயணங்களை உதிர்ப்பதில்லைபறவைகள்!* வாழ்வில் மகிழமகிழ்ந்தே வாழவாருங்கள் பறவையாகலாம்நாமும் பயணம் போகலாம்!- வ.முருகன், பாப்பனப்பட்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !